Asianet News TamilAsianet News Tamil

அரசு அறிவிப்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு ஸ்டாலின் அறிவிக்கிறார்.. திமுகவின் முகத்திரையை கிழிக்கும் முதல்வர்

புயல், மழை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விசாயிகள் கோரிக்கையை ஏற்று பயிர்க் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.விவசாயிகளின் கோரிக்கையின் படி ஏப்ரல் 1ம் தேதி முதல் மும்மனை மின்சாரமும் அளிக்கப்படும். 

CM Edappadi palanisamy slams MK Stalin
Author
Chennai, First Published Feb 26, 2021, 3:44 PM IST

மக்களின் பல்வேறு கோரிக்கைகளை, அரசு பரிசீலித்து நிறைவேற்றி வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழினசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. புயல், மழை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விசாயிகள் கோரிக்கையை ஏற்று பயிர்க் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையின் படி ஏப்ரல் 1ம் தேதி முதல் மும்முனை மின்சாரமும் அளிக்கப்படும். மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்ற கடனும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளேன்.கூட்டுறவு  வங்கிகளில் பெற்ற 6 சவரன் வரையான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. 

CM Edappadi palanisamy slams MK Stalin

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சொல்லித்தான் நான் ரத்து செய்ததாக பேசி வருகிறார். ஸ்டாலின் உண்மைக்கு புறம்பாக பேசிவருவதாக முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். அரசு அறிவிக்கவுள்ளதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு ஸ்டாலின் அதை அறிவித்துவிடுகிறார். மக்களுக்கு எந்த காலகட்டத்தில் உதவி செய்ய வேண்டுமோ அதை அந்தந்த காலத்தில் செய்கிறோம். இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களும் உடன் வாங்கித்தான் மக்களுக்கு உதவி செய்கின்றன. எந்த மாநிலமும் பணத்தை வைத்துக் கொண்டு திட்டங்களை அறிவிப்பதில்லை.

CM Edappadi palanisamy slams MK Stalin

வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்க வேண்டிய அவசியம் இருப்பதால் வாங்கப்படுகிறது. அரசின் அறிவிப்புகளுக்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதை நிறைவேற்றிக் காட்டும் அதிமுக அரசு. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் திமுக குரல் கொடுக்கவில்லை. தேர்தல் வந்தால் குரல் கொடுப்பார்கள். மக்களுக்கு எந்த காலகட்டத்தில் உதவி செய்ய வேண்டுமோ அதை அந்தந்த காலத்தில் செய்கிறோம். இ-டெண்டரில் எப்படி முறைகேடு செய்ய முடியும்? எங்கிருந்து வேண்டுனானாலும் இ-டெண்டர் எடுக்கலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios