தான் ஆட்சிப் பொறுப்பேற்று 7 மாதங்கள் ஆகிவிட்டதாகவும், பொறுப்பேற்றதில் இருந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று சொல்லி வருவதாகவும், அவரால் என்ன செய்ய முடிந்தது ? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது 134 எம்எல்ஏக்களுடன் தற்போதைய அரசு பெரும்பான்மையுடன் செயல்பட்டு வருவதாக கூறினார்.

பாஜகவுடன் கூட்டணி வைக்கப்பபோவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தொடர்பாக நிருபர்கள் கேட்டபோது, தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து முடிவு செய்யலாம் என தெரிவித்தார்.

தான் ஆட்சிப் பொறுப்பேற்று 7 மாதங்கள் ஆகிவிட்டதாகவும், ஜெயலலிதாவின் கனவு திட்டங்கள் ஒவ்வொன்றும் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தாம் பொறுப்பேற்றதில் இருந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று சொல்லி வருவதாகவும், அவரால் என்ன செய்ய முடிந்தது ? என்றும் முதலமைச்சர் எடப்பாடி கேள்வி எழுப்பினார்.