அவசர அவசரமாக ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி..! 

ஆளுநர் பன்வாரிலால் டெல்லி சென்று திரும்பிய நிலையில் அவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து முக்கிய பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். 

டிஜிபி நியமனம், தலைமை செயலாளர் நியமனம், 7 பேர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களைப் பற்றி பேசுவதற்காக ஆளுநரை முதல்வர் சந்திப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பிய நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து பேசி வருகிறார். 

இதற்கு முன்னதாக இன்று காலை அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சசிகலா ஆதரவு 3 எம்எல்ஏக்கள் மற்றும் இரண்டு அமைச்சர்கள் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர். இருந்தபோதிலும் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் பனிப்போர் நடந்து வருவதாக தொடர் விமர்சனம் எழுகிறது.  

மேலும், "2 தலைமை இருப்பதால் எந்த ஒரு முடிவையும் விரைவாக எடுத்துச் செயல்படுத்த முடியவில்லை என மதுரை வடக்கு மாவட்ட எம் எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்திருந்தார். அதன் பின் அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், தற்போது ஆளுநரை சந்தித்து பேசி வருகிறார் முதல்வர் எடப்பாடிபழனிசாமி.