Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்... பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களின் முழு விவரம்..!

முதல்வர் பழனிசாமியை விமர்சித்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின், அவரது கட்சியினருக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM candidate Edappadi palanisamy... Resolution passed in the General Committee meeting
Author
Chennai, First Published Jan 9, 2021, 12:54 PM IST

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்வதாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

சென்னையில் அ.தி.மு.க.,வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது. இதில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள்  கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் வருமாறு:

* முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்வதாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டினை முடிவு செய்ய ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.க்கு பொதுக்குழுவில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

* முதல்வர் பழனிசாமியை விமர்சித்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின், அவரது கட்சியினருக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கொரோனாவுக்கு இலவச தடுப்பூசி போடப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கும், மத்திய அரசுக்கும் அதிமுக பொதுக்குழு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு 

* இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட மாகாணசபை முறை ரத்து செய்வதை மத்திய அரசு தடுக்க வேண்டும்.

*  நகர்புற வீட்டுவசதி திட்டத்தில் தமிழகத்தை இணைத்த மத்திய அரசுக்கு நன்றி.

*  பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

*  தமிழகம் முழுவதும்  2000 மினி கிளினிக் திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு

* டிஜிட்டல் இந்தியா விருது பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு

*  தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டை முறைப்படுத்திய தமிழக அரசுக்கு பாராட்டு.

* உலக முதலீட்டாளர்களை ஈர்த்து, தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்ற அரசுக்கு பாராட்டு.

*  மருத்துவ படிப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவ கல்லூரியில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஏற்ற தமிழக அரசுக்கு பாராட்டு.

*  நாட்டிலேயே மிகச்சிறந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடிப்பதற்கும், பல்வேறு விருதுகளை பெற்றதற்கும், தமிழக அரசு, முதல்வர், துணை முதல்வருக்கு பாராட்டு.

* தமிழக மக்களுக்காக கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு பாராட்டு.

* தமிழகத்தில் தீயசக்திகள் தலைதூக்குவதை முறியடித்து, ஒரே குடும்பத்தின் ஏக போக வாரிசு அரசியலை வீழ்த்தி உண்மையான ஜனநாயகம் தழைக்க உழைப்போம்.

Follow Us:
Download App:
  • android
  • ios