காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அடிதடி... ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!!
சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு வழக்கம் போல் கட்சி தலைவர் உட்பட கட்சி நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்கு காரணமான திமுக அரசை கண்டிக்கிறேன்... ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்!!
அப்போது, நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருக்கும் ஜெயக்குமார் என்பவரை நீக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது அங்கிருந்த கட்சி நிர்வாகிகளுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக வாக்கு வாதம் முற்றியதை அடுத்து கைகலப்பாக மாறியது. அப்போது கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கிக்கொண்டனர்.
இதையும் படிங்க: குற்றவாளிகளை கொண்டாட கூடாது.. எழுவர் விடுதலை குறித்து பாஜகவை சீண்டிய எம்.பி ஜோதிமணி
இதில் மூன்று பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதை அடுத்து அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். கட்சி நிர்வாகிகள் திடீரென ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கிக்கொண்டதால் அங்கு கலவரம் போல் காட்சி அளித்தது. இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.