கார்த்திகை தீபம் ஏற்றுவதில் போட்டி.! கோயில் ராஜபட்டரின் வேட்டியைப் பிடித்து இழுத்த திமுக எம்எல்ஏ

இந்து அறநிலை துறைக்கு சொந்தமான கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபம் யார் ஏற்றுவது என்பதில் ஓபிஎஸ் குடும்பத்தினருக்கும் மற்றும் திமுகவினருக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கோவில் ராஜ பட்டர் கார்த்திகை தீபம் ஏற்றியதால் திமுகவினர் அதிர்ச்சியில் ஏமாற்றத்துடன் அங்கிருந்து விரக்தியில் கலைந்து சென்றனர்.

Clash between DMK and OPS over lighting Karthikai Deepam at Theni Temple

கார்த்திகை தீபம்- வாக்குவாதம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் மலை மேல் அமைந்துள்ளது கைலாசநாதர் திருக்கோயில்.  இந்த கோயில்  பல ஆண்டுகளாக பாழடைந்து பராமரிப்பு இன்றி இருந்து வந்தது. இதன் பின்னர் ஓபிஎஸ் 2002 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினரான  பின்பு அமைச்சர் மற்றும் முதலமைச்சரான நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தாரின் முயற்சியால் இவர்களின் சொந்த செலவில் கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பக்தர்கள் சென்று வரும் வகையில் கோவிலுக்கு சாலைகள் அமைக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனால்  கடந்த 14 ஆண்டுகளாக ஓபிஎஸ்யின் குடும்பத்தாரினர் கார்த்திகை தீபம் ஏற்றி வந்தனர். மேலும் கோவிலின் கார்த்திகை திருவிழா காலங்களில் கோவிலுக்கு தேவையான அனைத்து  அடிப்படை வசதிகளும் ஓபிஎஸ் தனது சொந்த செலவில் செய்து வந்தார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் கடந்த 14 ஆண்டுகளாக ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தார் மட்டுமே கார்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தீபத்தை ஏற்றி வைத்து வந்து கொண்டிருந்தனர்.

2026ல் முதல்வர்.! பிரதமர் வேட்பாளர் நீங்க தான் அண்ணா.! போற போக்கில் பாஜகவில் பூகம்பத்தை கிளப்பிய சூர்யா சிவா !

Clash between DMK and OPS over lighting Karthikai Deepam at Theni Temple

ஓபிஎஸ் குடும்பத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது

இந்த சூழலில் ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு இந்த ஆண்டு இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது என திமுகவைச் சேர்ந்த தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இந்நிலையில் இன்று  கார்த்திகை தீபத்தை ஏற்றுவதற்காக வழக்கம்போல் ஓபிஎஸ் குடும்பத்தினர் அந்த கோவிலுக்கு செய்ய வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர். 

தேசிய தலைவர் அம்பேத்கரை ஒரு சாதிக்குள் அடைத்து சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கும் திருமா! வெளுத்து வாங்கும் பாஜக

Clash between DMK and OPS over lighting Karthikai Deepam at Theni Temple

 இந்நிலையில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்து சமய அறநிலையத்துறையின் கோவில் செயல் அலுவலர்களை கொண்டு கார்த்திகை தீபம் ஏற்ற திமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பெரியகுளம் பாலசுப்ரமணியர் திருக்கோவில் செயல் அலுவலர் ராம திலகம் என்ற பெண் செயல் அலுவலரை கார்த்திகை தீபம் ஏற்ற திமுகவினர் மேடை ஏற்றி நிறுத்தினர். அதே சமயம் ஓபிஎஸ் இன் இளைய மகன் ஒ.பி.ஜெயபிரதீப் மற்றும் அவரது குடும்பத்தினர் என பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது ஓபிஎஸ் இன் இளைய மகன் ஜெயப்பிரதீப்புக்கு பரிவட்டம் கட்டப்பட்ட நிலையில் இதற்கு தங்கத்தமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தங்கதமிழ்செல்வன்  ஜெயப்பிரதீப் இடையே மற்றும் அதிமுகவினர்  திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திமுக- ஓபிஎஸ் ஆதரவாளர் மோதல்

இதனிடையே கோவில் பூசாரி கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக தீபத்துடனும்,  செயல் அலுவலர் கார்த்திகை தீபம் ஏற்ற தீ பந்தத்துடனும் இருவருக்கிடையே போட்டி ஏற்பட்டது. அப்பொழுது கோவில் பூசாரி கார்த்திகை தீபம் ஏற்ற முற்பட்டபோது பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் பூசாரியின் வேட்டியை பிடித்து பின்னே இழுக்க என தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியாக ஒ.பி.ஜெய பிரதீப் கையில் வைத்திருந்த விளக்கை கோவில் பூசாரி பெற்றுக் கொண்டு கார்த்திகை தீபத்தை ஏற்றி வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார்  மற்றும் திமுகவினர் ஓபிஎஸ் தரப்பினர் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்பு அந்த இடத்தை விட்டு ஆவேசமாக கிளம்பிச் சென்றனர்.

Clash between DMK and OPS over lighting Karthikai Deepam at Theni Temple

தீபத்தை வழிபட்ட ஓபிஎஸ்

பின்னர் அங்கிருந்தவர்களிடம் பேசிய ஜெயப்பிரதீப் திமுகவினர் அரசியல் காரணங்களுக்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களை மக்களும் தெய்வமே பார்த்துக் கொள்வார்கள் என ஆவேசமாக முழங்கினார். இதனைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கைலாசநாதர் திருக்கோவிலுக்கு வந்து கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட கொப்பறையில் ஒரு குடம் நெய் ஊற்றி கார்த்திகை தீபத்தை வழிபட்டு பின்பு கைலாசநாதர் சாமி தரிசனம் செய்தார். கார்த்திகை தீபம் ஏற்றுவதில் ஓபிஎஸ் குடும்பத்தினருக்கும் திமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதத்தால் கார்த்திகை தீபம் காலதாமதமாக 7 மணிக்கு ஏற்றப்பட்டது இதனை காரணமாக பக்தர்கள் அவதி அடைந்தனர்.

 இதையும் படியுங்கள்

இபிஎஸ்க்கு மட்டும் டெல்லியில் இருந்து அழைப்பிதழ் வந்தது ஏன்..? ஓபிஎஸ் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை பதில்..?
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios