பொய்களையும் வதந்திகளையும் நாள்தோறும் பரப்புவது எதிரிகளின் வேலை. அதனை முறியடிக்கும் வகையில் கழக ஆட்சியின் சாதனைகளையும் அதனால் மக்கள் பெறும் பயன்களையும் முன்னிறுத்துவது நம்முடைய கடமை. அதற்கேற்றவாறு, அணியின் கட்டமைப்புகள் மேலும் வலிமைப்படுத்தப்படுகின்றன.

திராவிடமாடல் ஆட்சியை நோக்கி வரும் அவதூறுகளையும் பொய்களையும் பரப்புவோரை விட்டு வைக்க மாட்டோம் என டி.ஆர்.பி. ராஜா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

திமுக எம்எல்ஏவும் தகவல் தொழில்நுட்ப அணியில் செயலாளருமான டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பொய்களையும் வதந்திகளையும் நாள்தோறும் பரப்புவது எதிரிகளின் வேலை. அதனை முறியடிக்கும் வகையில் கழக ஆட்சியின் சாதனைகளையும் அதனால் மக்கள் பெறும் பயன்களையும் முன்னிறுத்துவது நம்முடைய கடமை. அதற்கேற்றவாறு, அணியின் கட்டமைப்புகள் மேலும் வலிமைப்படுத்தப்படுகின்றன. 

கடந்த 3 மாதங்களில் உள்ளாட்சி தேர்தல்கள், சட்டமன்ற நிகழ்வுகள், தலைவர் பிறந்தநாள், முதல்வர் அயலக சுற்றுப்பயணம், பட்ஜெட் தொடர், நமது அரசின் முதலாமாண்டு சாதனைகள், இடை இடையில் எதிர் அணி கோமாளிகளின் பொய்கள் நிரம்பிய வாதங்களுக்கு மறுப்பு வீடியோக்கள் என எல்லோரும் அறிந்த பல விடயங்களையும் பலருக்கு தெரியாத பல அசைன்மென்ட்களையும் தகவல் தொழில்நுட்ப அணி செய்துவருகிறது. "ஆதங்கத்தில்" நம்மில் சிலரும், "அரசியல் புரிதல் இல்லாத காரணத்தினால்" சிலரும், எழுப்பும் கேள்விகளுக்கும் இங்கே பதில் சொல்ல துவங்கினால் அது எதிரிக்கே ஆதாயம். 

அணியில் உள்ள பலரும், *இல்லாத உடன்பிறப்புகள் பலரும்*, சிறப்பான அர்ப்பணிப்போடு செயல்பட்டு தலைவர் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிறப்பாக செயல்படுகிறார்கள். பொறுப்பிலிருந்தும் செயல்படாத சிலர் விடுவிக்கப்பட்டு புதியவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. நானும் நீங்களும் நினைக்கும் அளவிற்கு அணி செயல்படவேண்டும் என்றால் அது ***தற்போது இருக்கும் கட்டமைப்பில் செய்யகூடியதல்ல***. ஆகவே தான் அணியின் வலிமை 10x அதிகரிக்கும் பணி கடந்த 2 1/2 மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை தாண்டி நான் எதுவும் வெளிப்படையாக சொல்ல இயலாது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்திய அரசியல் களம் எதிர்பார்க்கும் மாபெரும் தலைவராக நமது #முதல்வர் இருக்கிறார். அவரது #திராவிடமாடல் ஆட்சியை நோக்கி வரும் அவதூறுகளையும் பொய்களையும் பரப்புவோரை விட்டு வைக்க மாட்டோம். (இதற்கு நாகரீக அரசியல் சரிவராது என்பது எனது தனிப்பட்ட கருத்து) எதிரி பொய்களையும் அவதூறுகளையும் பரப்பினால், அவனை அவனது பாணியிலேயே வெளுத்து வாங்குவது எப்படி என்பதை யாரும் நமக்கு கற்றுத் தர வேண்டியதில்லை. 

Scroll to load tweet…

அதே சமையம் கருத்தாயுதங்களும் பாயும். அது வரை துப்பாக்கிய எதிரிபக்கம் திருப்புங்க பாஸு! இன்னும் ஒரு சில வாரங்களில் உதயமாகும். எனது தனிப்பட்ட மற்றும் நமது அணியின் ஒட்டுமொத்த நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை. அடிமைகளை அடிக்கிறோம், மதவெறி "கோமியம் கேங்கை" ஓயாமல் அடிக்கிறோம் புதிய ஆயுதங்கள் பட்டறையில் So #KeepCalm AND #BelieveInTheWING. #June3 முதல் உங்கள் அபிமான திரைகளில் @DMKITwing 2.0" என பதிவிட்டுள்ளார். இதனை திமுக பலரும் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.