Asianet News TamilAsianet News Tamil

அமலுக்கு வந்தது குடியுரிமை சட்டத் திருத்தம்... சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்தச் சட்டம் உடனடியாக நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. வட கிழக்கு மா நிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது..

citizenship bill implemented after president agree
Author
Delhi, First Published Dec 13, 2019, 7:19 AM IST

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால், அச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

citizenship bill implemented after president agree
குடியுரிமை சட்டத்தில் நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி உள்ள நிலையில், எளிமையாக இச்சட்டம் நிறைவேறியது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில், இச்சட்டம் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அதிமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

citizenship bill implemented after president agree
இச்சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது. ஆனால், முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு மட்டும் குடியுரிமை வழங்க இந்தச் சட்ட மசோதா வழிவகை செய்கிறது. இச்சட்டத்தில் முஸ்லீம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. வட கிழக்கு மாநிலங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.citizenship bill implemented after president agree
இதற்கிடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்தச் சட்டம் உடனடியாக நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. வட கிழக்கு மா நிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios