நாம் அனைவரும் பாகிஸ்தான்தான் மிகப்பெரிய எதிரி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் சீனாதான் மிகப்பெரிய அச்சுறுத்தல் என சரத் பவார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான சரத் பவார் கூறுகையில், ‘’நாம் எதிரியை பற்றி சிந்திக்கும்போது, முதல் பெயராக நமது மனதில் தோன்றுவது பாகிஸ்தான்தான். ஆனால் பாகிஸ்தானை பற்றி மிகப்பெரிய அளவில் கவலைப்பட வேண்டியதில்லை. நீண்டகாலமாக சீனாவின்  பலம், திட்டம், செயல் ஆகியவை இந்தியாவின் நலத்திற்கு எதிராகவே இருந்துள்ளது. இந்தியாவுக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

நட்புணர்வு என்ற பிம்பத்தை உருவாக்குவதன் மூலம் இரு நாட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாது. பொருளாதாரத்தில் வலிமையாகுவதில் சீனா இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்’’ எனத் தெரிவித்தார்.