Asianet News TamilAsianet News Tamil

#UnmaskingChina:இந்தியாவுக்கு சீனா எதிரி, பாஜக விரோதி... சீனாவிடம் காசு வாங்கும் போலி தேச பக்தர்களால் சர்ச்சை!

சீனா நம்மை உள்ளிருந்து கெடுப்பதில்லை. ஆனால் பாஜக உள்ளிருந்தே நம்மைக் கெடுக்கிறது என முன்னாள் அம்னெஸ்டி இந்தியா தலைவர் ஆகார் படேல் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

China is enemy to India ... but BJP and rival
Author
Tamil Nadu, First Published Jun 19, 2020, 5:40 PM IST

சீனா நம்மை உள்ளிருந்து கெடுப்பதில்லை. ஆனால் பாஜக உள்ளிருந்தே நம்மைக் கெடுக்கிறது என முன்னாள் அம்னெஸ்டி இந்தியா தலைவர் ஆகார் படேல் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய-சீன எல்லையில் கடும் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ள நிலையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் எய்தியுள்ள நிலையில் பிரதமர் மோடி இந்தியா அமைதியையே விரும்புகிறது, ஆனால் தொடர்ந்து சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று கூறியுள்ளார்.China is enemy to India ... but BJP and rival

பாஜக எம்.பி. சுப்பிரமணிய சுவாமி, “சீனாவுடன் நாம் ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபடுவதெல்லாம் பயன் அளிக்காது, பிரச்சினைத் தீர்க்காது. சீன ராணுவம் திரும்பிப் போகமாட்டார்கள். இந்திய மக்களும், பிரதமர் மோடியும் பொறுமையாக இருக்கமாட்டார்கள். இந்த புதிய நிலைப்பாட்டை மோடி ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆதலால், நாம் போருக்குப் போகப்போகிறோம், அது குறிப்பிட்ட இலக்கை நோக்கிய போராக இருக்கலாம். கடந்த 1962-ம் ஆண்டு நம் கழுத்தைச் சுற்றி என்ன தொங்கினாலும் சரி, அதேபோன்ற சூழல் இப்போது இல்லை.

கடந்த 1962-ம் ஆண்டில் இருந்ததைப் போன்று இந்தியர்கள் மென்மையாக இருப்பார்கள் என்று சீனா நினைத்துவிடக்கூடாது.” என்று சீனாவுக்கு எதிராக பலரும் குரல் எழுப்ப, முன்னாள் அம்னெஸ்டி இந்தியா தலைவர் ஆகார் படேல் தன் சமூகவலைத்தளமான ட்விட்டரில் மேற்கொண்ட பதிவு ஒன்று சர்ச்சையாகி உள்ளது. 

அவரது பதிவில்,  “நம் உண்மையான விரோதி பாஜகதான். சீனா ஒரு எதிர்ப்பாளர்தான். சீனாவுக்கு உத்திரீதியான குறிக்கோள்கள் உள்ளன. சீனா நம்மை உள்ளிருந்து கெடுப்பதில்லை. ஆனால் பாஜக உள்ளிருந்தே நம்மைக் கெடுக்கிறது”என்று பதிவிட்டிருந்தார்.China is enemy to India ... but BJP and rival

இந்த கருத்திற்கு கடும் கண்டனம் கிளம்பியுள்ளது. ஆகார் படேல் முதல் முறையாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிடவில்லை, ஏற்கெனவே அமெரிக்காவில் எழுந்த போராட்டங்கள் போல் இந்தியாவில் தலித்துகள், முஸ்லிம்கள், ஆதிவாசிகள் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறி பெரும் சர்ச்சையைக் கிளப்ப ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது.

 

இந்நிலையில் இவர் பாஜகதான் நாட்டின் முதல் விரோதி என்று கூறியிருப்பதை பாஜக-வைச் சேர்ந்த கர்நாடக எம்.பி. ஷோபா கடுமையாகச் சாடும்போது, “அறிவுஜீவிகளையும் அவர்களின் இந்தியா மீதான வெறுப்பும் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. சீன சம்பளப்பட்டியலில் உள்ளவர்கள் சீனா நம் ராணுவம் மீது நடத்திய தாக்குதலை மறைத்து மூடப்பார்த்து வருகிறார்கள். எல்லையில் அபாயகரமாகத் திகழும் சீனாவைப் போலவே நாட்டில் உள்ள இத்தகைய விஷப்பாம்புகளும் சரிசமமான அபாயமே”எனக் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios