காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் எனவும் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் வாதங்கள் வலுவாக எடுத்துரைக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் எனவும் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் வாதங்கள் வலுவாக எடுத்துரைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 
 
விவசாய மக்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாக எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளதாகவும் மத்திய அரசின் மனுவை நிராகரிக்கும் வகையில் வலுவாக வாதாடுமாறு வழக்கறிஞர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தீர்ப்பு வந்த உடனேயே ஸ்கீம் என்ற வார்த்தைக்கு மத்திய அரசு விளக்கம் கோரியிருக்கலாம் எனவும் ஆனால் மத்திய அரசு அவ்வாறு செய்யவில்லை எனவும் முதலமைச்சர் பழனிச்சாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.