தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற தொண்டரின் செல்போனை ஹரியானா மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் தட்டிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம், கர்னல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கலந்து கொள்ளச் சென்றார் முதல்வர் மனோகர்லால் கட்டார். அப்போது தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற தொண்டரின் செல்போனை கோபத்தில் தட்டிவிட்டார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எப்போதும் அமைதியாக காணப்படும் மனோகர் லால் கட்டார் திடீரென பொது வெளியில் கோபப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

முன்னதாக நம்ம ஊர் நடிகர் சிவகுமார் ஒரு விழாவில் கலந்து கொள்ள சென்றபோது மதுரையில் செல்ஃபி எடுக்க முயன்ற ஒரு இளைஞனின் செல்போனை தட்டிவிட்டார்.