வாழ்க்கையில் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற அவர், தன் குடியை கெடுத்த குடியை தூக்கி எறிந்தார். அதன் பிறகு ஆம் ஆத்மி கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட அவர் அதில் தீவிரமாக பணியாற்றி வந்தார்.
பஞ்சாப் முதல்வர் பகவத் மான் மதுபோதையில் குருத்வாராவில் நுழைந்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் பகவந்த் மான் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே குடிக்கு அடிமையாகி வேலை, மனைவி என அனைத்தையும் இழந்து, பின்னர் அதிலிருந்து மீண்டு வந்த பகவந்த் மான் முதலமைச்சர் ஆகியுள்ள நிலையில், அவர் மீதும் பாஜகவினர் குடிகார பட்டம் சூட்டி இருப்பது ஆம் ஆத்மி தொண்டர்கள் மற்றும் பகவந்த் மான் ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநில தொலைக்காட்சிகளை திருப்பினாள் காமெடியனாக திரையில் தோன்றி பஞ்சாப் மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தவர்தான் பகவந்த் மான். அவரின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ஆகாத தொலைக்காட்சிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பஞ்சாப் மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் வைத்திருந்தவர் பகவத் மான். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் சமூக அக்கறையும், புரட்சிகர கருத்துக்களும் நிறைந்திருந்ததே அவர் மீதான ஈர்ப்புக்கு காரணம் ஆகும். ஆனால் ஒரு கட்டத்தில் மதுவுக்கு அடிமையாகி தான் நேசித்த தொழில், மனைவி என அனைத்தையும் இழந்தார் பகவத் மான். வாழ்க்கையில் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற அவர், தன் குடியை கெடுத்த குடியை தூக்கி எறிந்தார்.
அதன் பிறகு ஆம் ஆத்மி கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட அவர் அதில் தீவிரமாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தான் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அம்மாநிலத்தில் முதலமைச்சர் ஆனார். ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். மக்கள் அவரின் செயல்களை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில்தான் பாஜக அவர் மீது பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. கடந்த 14ஆம் தேதி சீக்கிய மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் பைசாகி பஞ்சாப் திருவிழாவின்போது முதலமைச்சர் பகவந்த் மான் குடிபோதையில் குருத்வாரா தம்தாமா சாஹிப்பிற்குள் நுழைந்தார் என்று சிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி அவர் மீது குற்றம் சாட்டியது.

இந்நிலையில் இது குறித்து பஞ்சாப் மாநில பாஜக இளைஞரணி தேசிய செயலாளர், தஜிந்தர் பால்சிங் பக்கா தனது ட்விட்டர் பக்கத்தில் மாநில முதல்வர் பகவத் மானுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். குடி போதையில் குருத்வாராவுக்குள் நுழைந்த பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பகவந்த் மான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று முதல் முறையாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
