வாயில் வடை சுட்டது போதும்... இப்ப காட்டுங்க உங்க சமூகநீதியை... ஸ்டாலினை வாண்டடா வம்பிழுக்கும் V.P துரைசாமி.
சமூக நீதி திராவிட பூமி என வாயில் வடை சுடுவது நிறுத்திவிட்டு பாஜக முன் நிறுத்தியுள்ள குடியரசு தலைவர் வேட்பாளர் பழங்குடியினப் பெண்மணி திரௌபதி முர்முவை முதல்வர் ஸ்டாலின் ஆதரிக்க வேண்டுமென தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி துரைசாமி வலியுறுத்தியுள்ளார்.
சமூக நீதி திராவிட பூமி என வாயில் வடை சுடுவது நிறுத்திவிட்டு பாஜக முன் நிறுத்தியுள்ள குடியரசு தலைவர் வேட்பாளர் பழங்குடியினப் பெண்மணி திரௌபதி முர்முவை முதல்வர் ஸ்டாலின் ஆதரிக்க வேண்டுமென தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி துரைசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:-
வாக்குண்டா ? நல்ல மனமுண்டா ? சமூகநீதி நோக்குண்டா..? இந்தியாவில் தற்போது ஒரு மாபெரும் புரட்சி நடைபெற்றிருக்கிறது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு நடைபெற்று இருக்கிறது.
இதை படியுங்கள்: "அம்மா இல்ல, சின்னம்மா நான் இருக்கேன் ".. போன் போட்டு தைரியம் சொன்ன வி.கே சசிகலா.
இந்தியாவின் உயர் அதிகாரம் மிக்க குடியரசு தலைவர் பதவிக்கு, முதல்முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்த மலையக பெண்மணிக்கு, பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி அரசால் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இரண்டாவது முறையாக ஒரு பெண்மணிக்கும். முதல்முறையாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த வாய்ப்பு மறுக்கப்பட்ட மலையகத்தைச் சேர்ந்தவருக்கு குடியரசுத் தலைவராக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திராவிட மாடல், திராவிட மாடல் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் அவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பட்டியல் இனத்தவருக்கும், குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் என்று தன்னை தானே வியந்து சொல்லிக் கொள்வது வழக்கம். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே, உங்களின் சமூக நீதிக் கொள்கையை நிரூபிக்க உங்களுக்கு அருமையான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பட்டியல் இனத்திற்காக பாடுபடுவோம் என்று வாயால் மட்டும் வடை சுட்டு கொண்டிருக்காமல், பட்டியல் இனத்தின் மலை சாதியினப் பெண்மணிக்கு வாக்களித்து உங்களின் சமூகநீதியை நிலைநாட்டி காட்டவேண்டும். தாங்கள் பெரியாரின் நினைவிடத்திற்கு வேண்டுமானால் ஒரு முறை சென்று வாருங்கள். அண்ணாவின் நினைவிடத்திலும் அரைமணி நேரம் சென்று வாருங்கள். ஏன் கலைஞரின் நினைவிடத்திலும் சென்று கேட்டுப்பாருங்கள். சமூக நீதி குறித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு வாருங்கள்.
பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் வெறும் பேச்சினால் சொல்லிக் கொண்டிருந்ததை மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் அவர்களுக்கு உயர் பதவி வழங்கி உண்மையான சமூக நீதியை நிலைநாட்டி நிரூபித்திருக்கிறார். அண்ணல் வாஜ்பாய் அவர்கள் காலத்தில் சிறுபான்மை இனத்தவரான அப்துல் கலாம் அவர்களுக்கு குடியரசுத்தலைவராக பாஜக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது இந்தியாவிலேயே ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பட்டியலின மக்களுக்காகவும் அதிகமாக குரல் கொடுக்கும் மாநிலம் தமிழகம் என்று உரத்த குரலில் உச்சரித்தால் மட்டும் போதுமா? நடைமுறையில் அதை நீங்கள் செய்து காட்ட வேண்டாமா?
சமூகநீதி காப்பாளர் என்ற பட்டங்கள் மட்டும் சூட்டிக்கொண்டால் மட்டும் போதாது. அதை செயலில் நிரூபித்துக் காட்ட வேண்டும். உங்களுக்கு அருமையான வாய்ப்பினை பாரதிய ஜனதா கட்சி வழங்கியிருக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கப் போவது, ஒடுக்கப்பட்ட பழங்குடியின பெண்மணிக்கா? அல்லது உயர்ஜாதி இனத்தவருக்கா? என்பதை நீங்களும் உங்கள் கூட்டணி கட்சியினரும் முடிவு செய்து கொள்ளுங்கள்.
இதை படியுங்கள்: ஹிந்தி தெரியாது போடான்னு போராடினானுங்க.. தமிழ்ல 47000 பேர் ஃபெயிலாமே..?? நக்கலடித்த எச். ராஜா
உங்கள் கட்சியின் சமூக நீதி என்பது நிஜமா போலியா என்பதை நிரூபித்துக் காட்டுங்கள். மக்களும் தெரிந்து கொள்ளட்டும் நீங்கள் காப்பது சமூக நீதியா? அல்லது நீங்கள் வெறும் சந்தர்ப்பவாதியா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.