ஹிந்தி தெரியாது போடான்னு போராடினானுங்க.. தமிழ்ல 47000 பேர் ஃபெயிலாமே..?? நக்கலடித்த எச். ராஜா
ஹிந்தி தெரியாது போடான்னு கெத்தா போராடினார்கள், இப்போ 10 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் 47 ஆயிரம் பேர் பெயிலாகி உள்ளார்கள், இதற்கு இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹிந்தி தெரியாது போடான்னு கெத்தா போராடினார்கள், இப்போ 10 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் 47 ஆயிரம் பேர் பெயிலாகி உள்ளார்கள், இதற்கு இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ,இதுதான் திராவிடம் மாடலா ஹிந்தி தெரியாது என சொன்னவர்கள் இனி தமிழ் தெரியாது போடா என ஒப்பாரி வைப்பார்களா என்றும் அவர் கலாய்த்துள்ளார்.
2021-2022 பத்தாம் வகுப்பு தேர்வின் முடிவில் 9.12 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழில் திருச்செந்தூரை சேர்ந்த மாணவி துர்கா என்பவர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். இதே போல ஆங்கிலத்தில் 45 பேர், கணிதத்தில் 2156 பேர், அறிவியல் பாடத்தில் 1009 பேர் நூற்றுக்கு நூறு என சென்டம் பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் அதிகபட்சமாக கணிதத்தில் 9.11 சதவீதம் தேர்ச்சி பெறவில்லை, தேர்வு எழுதிய 4.60 லட்சம் மாணவர்களில் 60 ஆயிரம் பேரும் 4.52 லட்சம் மாணவியரில் 23 ஆயிரம் பேரும் கணிதத்தில் தோல்வி அடைந்துள்ளனர்.
இதை படியுங்கள்: ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் பதவி நேற்றோடு காலி..! இனி அவருக்கு இந்த பதவி தான்...!சிவி.சண்முகம் அதிரடி
குறிப்பாக பொதுத்தேர்வில் கணித வினாத்தாள் மிக கடினமாக இருந்ததாக மாணவர்கள் கவலை தெரிவித்தனர். இதனால் தேர்ச்சி விகிதமும் மிகவும் குறைந்துவிடாமல் இருக்க, விடை திருத்தும் பணிகளை நடுநிலையுடன் மேற்கொள்ளுமாறு ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது, அதில், ஓரளவுக்கு கணித வினாக்களுக்கு விடையளிக்க முயற்சித்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மதிப்பெண்கள் வழங்கினர். இதனால் தேர்ச்சி சதவீதம் 90 என்ற சதவீதத்தை எட்டியுள்ளது.
இதை படியுங்கள்: "ஏய்.. அண்ணாமலை லூசு பிடிச்சு திரியுறாரு போல" குற்றத்தை நிரூபி பதவி விலகுறேன்.. கொதித்த மதுரை மூர்த்தி.
இதேபோல பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் கட்டாயத் தாளாக உள்ளது. இந்நிலையில் 5.16 சதவீதம் பேர் அதாவது 37 ஆயிரம் மாணவர்கள் பத்தாயிரம் மாணவியர்கள் என 47 ஆயிரம் பேர் தாய் மொழியான தமிழ் மொழியில் தோல்வி அடைந்துள்ளனர். இது ஆசிரியர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.
இந்நிலையில் பலரும் இதை மேற்கோள்காட்டி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இப்படி ஒரு அவலமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த செய்தியை டேக் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, திராவிட மாடல்.. அது என்ன மணியா..? ஹிந்தி தெரியாது போடான்னு கெத்தா டி-ஷர்ட் எல்லாம் போட்டுட்டு போராடினானுங்க.. தமிழ் பாடத்துல 47000 பேர் ஃபெயிலாமே.? இப்போ என்ன பண்ணுவானுங்க.. தமிழ் தெரியாது போடான்னு ஒப்பாரி வைப்பானுங்களா.? என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு பலரும் பல வகையில் கருத்து கூறி வருகின்றனர்.