கோவையை திணற வைத்த 'செந்தில் பாலாஜி' - உற்சாக வரவேற்பில் மிரண்ட 'முதல்வர் ஸ்டாலின்' ! - என்ன நடந்தது கோவையில் ?
நேற்று கோவையில் நடந்த பிரமாண்ட அரசு விழாவை பார்த்து உற்சாகம் ஆகியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
கோவையில் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறுவிதமான நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக கோவை வருகை புரிந்தார்.முதல் அமைச்சர் வருகையையொட்டி, #KovaiwelcomeStalin கோவை வெல்கம் ஸ்டாலின் ஹேஸ்டேக் மூலமாக நெட்டிசன்கள் டுவிட்டரில் பதிவு பதிந்து இருந்தனர்.இதற்கு எதிராக பிஜேபியினர் #GoBackStalin என்ற ஹேஸ்டேக்கினை பதிவிட்டு கொண்டிருந்தனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த தமிழக முதல்வரை மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில் பாலாஜி தலைமையில் , ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சாா்பில் விமான நிலையத்தில் இருந்து வ.உ.சி மைதானம் வரை தலா ஒரு கிலோ மீட்டா் வீதம், 10 தொகுதிகளைச் சோந்தவா்களுக்கு ஒரு பகுதி ஒதுக்கப்பட்டு முதல்வருக்கு வரவேற்பு சிறப்பாக வழங்கப்பட்டது. ஒரு லட்சம் தொண்டா்கள் திரண்டு முதல்வரை வரவேற்க கோவை விமான நிலையத்திலிருந்து, வ.உ.சி மைதானம் வரைக்கும் வழிநெடுகிலும், மக்கள் கையில் கட்சி கொடிகளை அசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த உற்சாக வரவேற்பு முதல்வரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.அதுமட்டும் இல்லாமல், வழிநெடுக இருந்த மக்கள் அனைவரிடமும் பொறுமையாக மனுக்களை முதல்வர் பெற்றார். இச்சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு அரசு துறைகள் சார்பில் ரூ. 587. 91 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 70 பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகள் சார்பில் கோவை மாவட்டத்தில் ரூ. 89. 73 கோடி மதிப்பிலான 128 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அந்த பணிகளையும் தொடங்கி வைத்தார்.
மேலும் பல அரசு துறைகளின் சார்பில் ரூ. 646. 61 கோடியில் 25, 123 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், ‘ஒரு சில காரணங்களுக்காக நான் கோவைக்கு தாமதமாக வர முடிந்தது என்றும் நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா தான் வந்திருக்கேன்’ என்று சொல்லும்போது அரங்கங்கள் கைத்தட்டலில் அதிர்ந்தது. செந்தில் பாலாஜி என்னிடம் அரசு விழா ஒன்று நடத்த இருக்கிறோம் என்று அனுமதி கேட்டார். நானும் சரி என்று சொல்லிவிட்டேன்.இங்கு பார்த்தால் தான் தெரிகிறது,இது நிகழ்ச்சி அல்ல, மாநாடு என்று கூற மீண்டும் அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.
இந்த விழாவில் எதிர்க்கட்சியை சேர்ந்த, அதாவது கோவையில் வெற்றிபெற்ற 10 எம்.எல்.ஏக்களும் வரமாட்டார்கள் என்று தகவல் பரவியது. அது ஏறக்குறைய நடந்தது. கோவை தெற்கின் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மட்டும் கலந்துகொண்டார். அவர் வந்ததை தெரிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், உடனே மேடைக்கு வர சொல்லி இருக்கையில் அமர சொன்னார். இது அங்கு இருந்த அனைவரிடமும் ‘முதல்வர் எதிர்க்கட்சி நபர்களை கூட நாகரீகமான முறையில் நடத்துகிறார்’ என்ற பேச்சு எழுந்தது.அப்போது வாழ்த்துரை வழங்கிய வானதி, ‘கோவை தமிழகத்தின் இரண்டாவது மிக பெரிய நகரம். நாட்டில் பல்வேறு தொழில்நுட்ப விஷயங்களுக்கு பெயர் பெற்ற நகரம். மாவட்டத்திற்கு வருகை புரிந்து இருக்கக்கூடிய மாநிலத்தின் முதல்வர் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் மாவட்டத்தின் சார்பாக வரவேற்புகள் சொல்லி, வணக்கங்களை சொல்லி ஜனநாயகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசங்கம் மக்கள் நல திட்டங்களை செயலாற்றும் பொழுது மக்களோடு நெருக்கமாக இருந்து, அவர்களுடைய பிரச்சினைகளை புரிந்து கொண்டு ஆக்கப்பூர்வமாக வேகமாக பணியாற்றினால் மக்களோடு நலனை இன்னும் வேகமாக கொண்டு செல்லலாம்.
அந்த வகையில் அரசாங்கத்தோடு திட்டங்கள் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்வதற்கு சட்டமன்ற உறுப்பினர் என்று முறையில் இந்த மக்களுடைய குரலாய் இந்த மக்களுடைய பிரச்சினைக்கு என்றும், அவர்களுடன் இருக்கின்ற ஒரு நபராக உங்களுடைய மனப்பூர்வமான நன்றிகளை முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறோம். அதே போல கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி இந்த நிகழ்வு நடக்கும் இடம் முதல் கொண்டு இன்னும் சுற்றுவட்டார பகுதிகள் வரை கடினமான மழை, இயற்கை சீற்றங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் சாதாரண காலங்களில் கூட அடிப்படை வசதிகளை முன்னேற்றுவது இன்னும் வரக்கூடிய நாட்களில் அதிக தீவிரத்தோடு இந்த அரசு இயங்க வேண்டும் என்பதை கோரிக்கையை முன்வைத்து நன்றி கூறுகிறேன்’ என்றார்.
விழா மேடையின் முன் வரிசையில் கோவை மாவட்டத்தில் வெற்றி பெற்ற எஸ். பி. வேலுமணி உட்பட 10 எம்.எல்.ஏ க்களுக்கு விழாவின் முன் வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த இருக்கைகள் காலியாக காட்சியளித்தன. அரசு சார்பாக தெரிவிக்கும்போது அதிமுக எம்எல்ஏக்களுக்கு முறைப்படி அழைப்பிதழ் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஜனநாயக நாகரீகமான செயல் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.இந்த செயல் பொது மக்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அரசின் மக்கள் நல திட்ட விழாவில் கூட கலந்து கொள்ள மாட்டார்களா ? எதிர்க்கட்சி என்றால் எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டு தான் இருக்க வேண்டுமா ? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
விழா குறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்த போது, ‘இதுவரை கோவையில் இதுபோன்ற பிரமாண்ட கூட்டம் நடந்தது இல்லை. தலைவர் கலைஞர் இருக்கும் போது கூட, மாநாட்டுக்கு இவ்வளவு கூட்டம் வந்திருக்கிறது. வெறும் ஒரு அரசு விழாவுக்கு 1 லட்சம் பேரை திரட்டி கோவையை திணறடித்து இருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.இதானால் மிகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.வரப்போகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து செந்தில் பாலாஜியை கோவை மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமித்தார்.நிகழ்ச்சி முடிந்த உடன் செந்தில் பாலாஜியுடன் பேசிய முதல்வர், எப்படியும் வென்று விடுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது’ என்று செம ஹாப்பி மூடில் கூறியிருக்கிறார்.இதனால் மொத்த மகிழ்ச்சியில் இருக்கும் கோவை மாவட்ட திமுக, முதல்வரின் இந்த வார்த்தைகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எப்படியும் நாம் தான் ஜெயிப்போம் என்ற நம்பிக்கையை திமுகவினரிடம் கொடுத்துள்ளது.