கச்சத்தீவை திமுக அரசு தாரை வார்த்துவிட்டதாக வரலாறு தெரியாமல் உளறுகிறார்கள்.! பாஜகவை விளாசும் ஸ்டாலின்

பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவு மீட்கப்படும், மீனவர் பிரச்னைகளுக்கு நிரந்திர தீர்வு காணப்படும் என்று மோடி சொன்னார், செய்தாரா? என கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின் மீனவர் தாக்கப்படும் சம்பவத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றால் கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Chief Minister Stalin has said that the BJP is talking without knowing about the Kachchathivu issue

கச்சதீவு- ஸ்டாலின் ஆவேசம்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்களை யேற்று சந்தித்து பேசினார். இதனையடுத்து இன்று காலை ராமநாதபுரத்தில் நடைபெறும் மீனவர் நல மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மீன்பிடி தொழிலில் இந்தியாவிலேயே ஐந்தாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு தவிர்க்க முடியாதது என கூறினார்.

மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கான கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். கச்சத்தீவை திமுக அரசு தாரை வார்த்துவிட்டதாக வரலாறு தெரியாமல் உளறுவதாக கூறியவர்,  கலைஞர் கருணாநிதியின் எதிர்ப்பை மீறிதான் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.  கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க,போடப்பட்டது ஒப்பந்தம் மட்டுமே, சட்டம் இல்லை இல்லையென்றும் தெரிவித்தார். 

Chief Minister Stalin has said that the BJP is talking without knowing about the Kachchathivu issue

வரலாறு தெரியாமல் உளறுகிறார்கள்

இலங்கைக்கு கச்சதீவை வழங்கப்பட்ட பிறகும், பிரதமர் இந்திராவை சந்தித்து, கச்சத்தீவை மீட்க வேண்டும் என கலைஞர் வலியுறுத்தினார். கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக எந்த காலத்திலும் இருந்ததில்லை எனவும் தெரிவித்தார்.  பாஜக ஆட்சிக்கு வந்த பின் மீனவர்கள் மீது 48 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, 9 ஆண்டுகளில் 619 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு பாஜக அரசே பொறுப்பு எனவும் குற்றம்சாட்டினார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவு மீட்கப்படும், மீனவர் பிரச்னைகளுக்கு நிரந்திர தீர்வு காணப்படும் என்று மோடி சொன்னார், செய்தாரா? என கேள்வி எழுப்பினார். இந்தியாவுக்கு சொந்தமானது கச்சத்தீவு என்று ஆவணங்களை வெளியிட்டவர் கலைஞர் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். 

இதையும் படியுங்கள்

அக்காள்மடம் மீனவர் குடியிருப்புக்கு ஸ்டாலின் விசிட்: மீனவர்கள் வைத்த கோரிக்கை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios