Asianet News TamilAsianet News Tamil

சனாதனம் இப்படியொரு செய்தியைப் போடுமானால், 100 ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? சீறும் ஸ்டாலின்

நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

Chief Minister Stalin condemns daily for criticizing breakfast scheme for students Kak
Author
First Published Aug 31, 2023, 12:08 PM IST

தமிழகத்தின் காலை உணவு திட்டம்

பள்ளி மாணவர்களின் கல்வி இடை நிற்றலை தவிர்க்கும் வகையில் மதிய உணவு திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக ஏழை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வகையில் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. சுமார்404.41 ரூபாய் கோடி செலவில் 31.008 பள்ளிகளில் பயிலும் 17 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சரால் கடந்த வாரம் திருவாரூரில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி மாணவர்களுக்கு காலை உணவாக காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா, சேமியா உப்புமா,  அரிசி உப்புமா,  கோதுமை ரவை உப்புமா என பல வகையான உணவுகள் வழங்கப்படுகிறது.  . இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பிலும் வரவேற்பு கிடைத்த நிலையில் தெலுங்கானா மாநிலத்திலும் இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் அரசு அதிகாரிகள் நேரில் இந்த திட்டத்தை ஆய்வு செய்துள்ளனர். 

Chief Minister Stalin condemns daily for criticizing breakfast scheme for students Kak

காலை உணவு திட்டத்தை விமர்சித்து கட்டுரை

இந்தநிலையில் இந்த திட்டத்தை விமர்சித்து நாளிதழ் ஒன்று தலைப்பு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு, நிரம்பி வழியும் கக்கூஸ் என்ற தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மாணவர்கள் காலை உணவு பள்ளியில் சாப்பிடுவதால் பள்ளியில் கழிவறை நிறைவதாக கூறியுள்ளது. இந்த கட்டுரைக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் சமூகநீதி காக்க உருவானதுதான்  திராவிடப் பேரியக்கம்.  

நாளிதழுக்கு ஸ்டாலின் கண்டனம்

'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி. நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அந்த நாளிதழுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

காலை உணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் என்ன..? வெளியான புதிய பட்டியல்

Follow Us:
Download App:
  • android
  • ios