தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், வழகப்பட உள்ள புதிய பஸ்களில் சில, முதலமைச்சர் பார்வைக்காக தலைமை செயலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. 

அவற்றில் ஒரு பஸ்சை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். 

இந்த வகை பேருந்துகளில், சிறப்பு வாய்ந்த கருவி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. மது போதையில் டிரைவர் இருக்கிறாரா..? என்பதை கண்டறியும் கருவிதான். அது மது அருந்தி இருப்பதை கண்டறிவது மட்டும்மல்ல, டிரைவர் மது போதையில் இருந்தால் பஸ் எஞ்சின் ஸ்டார்ட் ஆகாது.

இந்தக் கருவி, ஸ்டியரிங் அருகே பொருந்தப்பட்டுள்ளது. டிரைவர் தனது சீட்டில் உட்கார்ந்ததும் அதிலிருக்கும் குழாயில் முதலில் ஊதா வேண்டும். அதன் பின்னர்தான் பஸ்சின் என்ஜினை ஸ்டார்ட் செய்ய முடியும்.

குழாயை ஊதாமல் ஸ்டார்ட் செய்ய முடியாது. குழாயில் ஊதும்போது மது வாடை கண்டறியப்பட்டால் என்ஜின் ஸ்டார்ட் ஆகாது. ஆக, பயணிகளுக்கு இதன் மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.