Asianet News TamilAsianet News Tamil

கூட்டணிக்கு வருமா தேமுதிக...? முதல்வர் பழனிச்சாமி இறுதிக்கட்ட ஆலோசனை...!

முதல்வர் பழனிச்சாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்தியலிங்கம் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

Chief Minister Palanisamy urges ...
Author
Tamil Nadu, First Published Mar 6, 2019, 11:41 AM IST

முதல்வர் பழனிச்சாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்தியலிங்கம் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனையில் தேமுதிவை கூட்டணியில் கொண்டு வரும் கடைசிக்கட்ட முயற்சிகளில் அதிமுக தீவிரமாக இறங்கியுள்ளது. 

பிரதமர் மோடி பங்கேற்கும் அதிமுக கூட்டணி பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் நிறுத்த வேண்டும் என அதிமுக, பாஜக தரப்பில் தீவிரம் காட்டப்டப்பட்டு வருகிறது. ஆனால் தேமுதிகவோ விடா கொண்டனான பிடி கொடுக்காமல் இருந்து வருகிறது. Chief Minister Palanisamy urges ...

பாமகவுக்கு இணையான தொகுதிகள் வேண்டும் அல்லது 21 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 5-க்கும் மேற்பட்ட சீட் ஒதுக்க வேண்டும் என தேமுதிக தரப்பில் பிடிவாதம் செய்வதாக கூறப்படுகிறது. இன்று காலை 10 மணிக்குள் கூட்டணி முடிவை அறிவிக்க தேமுதிகவுக்கு அதிமுக தரப்பில் கெடு விதித்தது. ஆனால் இதுவரை தேமுதிக தரப்பில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. Chief Minister Palanisamy urges ...

இதனால் தேமுதிகவை சமரசம் செய்யும் கடைசி நேர முயற்சிகளில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios