chief minister palanisamy blamed dmk in assembly

திமுக ஆட்சிகாலத்தில் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்ததாக வரலாறே கிடையாது சட்டமன்றத்தில் திமுகவை முதல்வர் பழனிசாமி விமர்சித்தார்.

மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இன்றைய கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூரீல் தண்ணீர் திறக்கப்படாது என அறிவித்தார். இதனை கண்டித்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர் . இதையடுத்து திமுக வெளிநடப்பை விமர்சித்து முதல்வர் பேசினார்.

அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் 1996, 1999, 2006, 2007, 2010, 2011ம் ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படாததை சுட்டிக்காட்டி விமர்சித்தார். மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் பலமுறை ஜூன் மாதத்திற்கு முன்னதாகவே தண்ணீர் திறந்துள்ளதாகவும், ஆனால் திமுக ஆட்சி காலத்தில் குறித்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதாக வரலாறே கிடையாது எனவும் முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.