Asianet News TamilAsianet News Tamil

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிக்கிக்கொள்ள மாட்டார்... சட்டத்துறை அமைச்சர் தடாலடி..!

ஏழு தமிழர்கள் விடுதலையில் நிறைய சட்டச்சிக்கல் உள்ளது; முதலமைச்சர் இதில் எச்சிக்கலிலும் சிக்கிக்கொள்ள மாட்டார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 
 

Chief Minister MK Stalin will not be involved in the release of seven people says Law Minister
Author
Tamil Nadu, First Published Jul 5, 2021, 6:06 PM IST


ஏழு தமிழர்கள் விடுதலையில் நிறைய சட்டச்சிக்கல் உள்ளது; முதலமைச்சர் இதில் எச்சிக்கலிலும் சிக்கிக்கொள்ள மாட்டார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்யுமாறு பல தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. அவர்களது விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு எடுத்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பப்பட்டது.Chief Minister MK Stalin will not be involved in the release of seven people says Law Minister

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக எழுவர் விடுதலையில் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த தமிழக ஆளுநர், அவர்களை விடுவிக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் இருப்பதாக கூறிவிட்டார். அதன் படி, எழுவர் விடுதலையில் ஆணை பிறப்பிக்க வேண்டுமென முதல்வர் முக ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு கடிதம் எழுதினார். முதல்வர் கடிதம் எழுதி ஒரு மாதம் ஆகும் நிலையில் எழுவர் விடுதலையில் குடியரசுத் தலைவர் என்ன முடிவு எடுத்துள்ளார் என்பது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.

Chief Minister MK Stalin will not be involved in the release of seven people says Law Minister

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ரகுபதி, எழுவர் விடுதலையில் பல சட்டசிக்கல்கள் உள்ளது, எழுவர் விடுதலையில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவரை கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வை ஆராய அமைக்கப்பட்ட குழு நீதிமன்றத்திற்கு எதிராக உருவாக்கப்படவில்லை என்றும் விடுதலை செய்யக் கோரியவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios