Asianet News TamilAsianet News Tamil

HBD Kalaignar Karunanidhi : பழம்பெரும் வசனகர்த்தா ஆரூர் தாஸ்க்கு விருது -10 லட்சம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.!

Aaroor dass : மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

Chief Minister MK Stalin has presented the Kalaignar karunanidhi kalai vithagar Award to legendary film narrator aaroor Dass
Author
First Published Jun 3, 2022, 9:38 AM IST

முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.இதற்காக,அரசு சார்பில் சென்னையில்  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில்,முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி சென்னை,அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Chief Minister MK Stalin has presented the Kalaignar karunanidhi kalai vithagar Award to legendary film narrator aaroor Dass

தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் "கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது" தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3 அன்று வழங்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. அந்த வகையில்  2022-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவுகலைத்துறை வித்தகர் விருதிற்காக பலநூறு திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதிய புகழ்பெற்ற வசனகர்த்தா  ஆரூர்தாஸ் (வயது 90) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Chief Minister MK Stalin has presented the Kalaignar karunanidhi kalai vithagar Award to legendary film narrator aaroor Dass

இந்நிலையில் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ்க்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதை நேரில் வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். முத்தமிழறிஞர் கலைஞர்  பிறந்த தினமான இன்று ஆரூர்தாஸ்க்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதும், பரிசுத் தொகை ரூபாய் பத்து இலட்சமும், வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த 1000 படங்களின் உரையாடலில் அழுத்தமான பங்கு வகித்தவர் ஆரூர்தாஸ். கதாபாத்திரம் அறிந்து வசனம் எழுதி செழுமை சேர்த்தவர் இவர் இவருக்கு கலைத்துறை வித்தகர் விருது இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : HBD Kalaignar Karunanidhi : தமிழக்தின் திராவிட மாடலுக்கு 99வது பிறந்தநாள் இன்று !!

இதையும் படிங்க : HBD Kalaignar Karunanidhi : “தமிழுக்கு அகவை 99” - அறிவாலயம் முதல் முரசொலி வரை முதல்வர் ஸ்டாலின் மரியாதை !

Follow Us:
Download App:
  • android
  • ios