நீட் மசோதா; போஸ்ட்மேன் வேலையைக் கூட ஆளுநர் செய்ய மறுப்பது அவருக்கு அழகல்ல.. முதல்வர் மு.க.ஸ்டாலின் சரவெடி..
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்களைத் தீட்டினால் - நியமனப் பதவியில் இருப்பவர்கள் அதைத் தடுப்பதா? மக்களை விட ஆளுநர்கள் அதிகாரம் பொருந்தியவர்கள் என்று நினைக்கிறார்களா? அப்படி ஒரு எண்ணம் அவர்கள் மனதில் இருந்தால் அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீட் விலக்கு மசோதா-தொடர் போராட்டம்
நீட் எதிர்ப்பு, தேசிய கல்வி கொள்ளை எதிர்ப்பு தொடர்பான பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது நீட் தேர்விற்கு எதிராக தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க.வும் ஆதரித்து சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவை நாம் நிறைவேற்றி இருக்கிறோம் எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.வும் அதை ஆதரித்தது எனவே கட்சிப் பாகுபாடின்றி ஒருமித்த கருத்தோடு ஒற்றுமை உணர்வோடு எல்லாக் கட்சிகளும் சட்டமன்றத்தில் ஆதரித்து அதை நிறைவேற்றி அதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக நாம் அனுப்பி வைத்தோம் அந்தச் சட்டமுன்வடிவு திரும்ப அனுப்பப்பட்டதைக் கூட ஏறக்குறைய இரண்டு வருடம் மறைத்து. சுயநலத்திற்காக தமிழக இளைஞர்களுக்குத் துரோகம் செய்தவர்கள்தான் இந்த இரட்டையர்கள் அந்த வகையில் தலைவர் கலைஞரின் வழித்தடத்தில் நாம் நீட்டை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். கழக அரசு அமைந்த பிறகான முதல் ஆளுநர் உரையிலேயே, நீட் தேர்வுக்கு எதிரான அரசின் நிலைப்பாட்டை நாம் பதிவு செய்தோம். முதலமைச்சராக டெல்லிக்கு சென்ற முதல் பயணத்தில், பிரதமருடனான சந்திப்பிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் நாம் அழுத்தம் கொடுத்தேன் - வலியுறுத்தினேன் - வற்புறுத்தினேன். ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் ஜூன் 10 2021 அன்று நீதியரசர் ஏ.கே.இராஜன் அவர்களின் தலைமையிலான உயர்மட்ட ஆய்வுக்குழுவை அமைத்தோம். ஒரு லட்சம் பேரிடம் இந்தக் குழு கருத்தை பெற்றது. 165 பக்க அறிக்கையை 14.07.2021 அன்று இக்குழு அரசிடம் அளித்தது. செப்டம்பர் 13 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் விலக்கு சட்டமுன்வடிவை ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம்
பிரதமர், ஆளுநரிடம் தொடர் கோரிக்கை
நீட் தேர்வுக்கு எதிராக ஆந்திர பிரதேசம் டெல்லி. சத்திஸ்கர், ஜார்கண்ட். கோவா, கேரளா, மகாராஷ்ட்ரா, ஒடிசா, பஞ்சாப் இராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு, அக்டோபர் 10, 2021 அன்று நான் கடிதம் அனுப்பினேன். சட்டமுன்வடிவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வையுங்கள் என்று நவம்பர் 27 அன்று ஆளுநரை சந்தித்து நான் நேரடியாக கேட்டுக் கொண்டேன். நாடாளுமன்றத்தில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பினார்கள் குடியரசுத் தலைவர் அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டது. உள்துறை அமைச்சரை சந்தித்துச் நேரடியாக விவாதித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு ஜனவரி 8-ஆம் நாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றினோம். காணொளி மூலமாக பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலும் ஜனவரி 12-ஆம் நாள் நான் வற்புறுத்தி வலியுறுத்தி பேசினேன். பிப்ரவரி 1-ஆம் நாள் ஆளுநர் அந்தச் சட்டமுன்வடிவைத் திருப்பி அனுப்பினார். பிப்ரவரி 5 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் மீண்டும் நடத்தி, பிறகு 7-ஆம் நாள் ட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி ட்டமுன்வடிவை நிறைவேற்றி அனுப்பினோம். மார்ச் 15 அன்று ஆளுநரைச் சந்தித்து வற்புறுத்தினேன். மார்ச் 31 பிரதமரையும் பேசியிருக்கிறேன் உள்துறை அமைச்சரையும் சந்தித்து இதுகுறித்து பேசியுள்ளேன்.
போஸ்ட் மேன் வேலையை செய்ய மறுக்கிறார்
ஆளுநரிடம் நான் கேட்பது என்பது சட்டமுன்வடிவுக்கான ஒப்புதல் அல்ல ஒப்புதல் வழங்கும் அதிகாரம் அவருக்கு இல்லை. நாம் கேட்பது. இந்த சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வையுங்கள், ஆசிரியர் சொன்னதுபோல, "போஸ்ட்மேன் வேலை செய்ய வேண்டும் என்பதுதான். முன்வடிவை அனுப்பி வைக்கும் அஞ்சல் துறைப் பணியைக் கூட ஆளுநர் செய்ய மறுப்பது என்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல, எட்டுக்கோடி மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் சேர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை ஒரு நியமன ஆளுநர் என்ற ஒற்றை மனிதர் திருப்பி அனுப்புகிறார். நாம் மீண்டும் அனுப்பியதையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப தொடர்ந்து மறுக்கிறார் என்றால், இந்த நாட்டில் மக்களாட்சி நடக்கிறது என்று சொல்ல முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்களைத் தீட்டினால் - நியமனப் பதவியில் இருப்பவர்கள் அதைத் தடுப்பதா? மக்களை விட ஆளுநர்கள் அதிகாரம் பொருந்தியவர்கள் என்று நினைக்கிறார்களா? அப்படி ஒரு எண்ணம் அவர்கள் மனதில் இருந்தால் அதை மாற்றிக் கொள்ள வேண்டும். மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நடத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்களா? ஏன். பிரதமர் மோடியே குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது. ஆளுநர் இப்படி நடந்துகொண்டால், இப்போது முட்டு கொடுக்கின்ற மாதிரித்தான் அப்போது முட்டு கொடுத்திருப்பாரா? பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் இப்படி அரசின் செயல்பாடுகளில் மூக்கை நுழைக்கிறார்களா? அப்படி மூக்கை நுழைத்தால். மாநில அரசுகள் முடங்கிவிடும் கை கட்டி வேடிக்கைப் பார்க்கும் என்று நினைக்கிறார்களா? பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கே உண்டு என்ற வகையில் ஒரு சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டுதான். இந்தக் கூட்டத்திற்கே நாங்கள் வந்திருக்கிறோம் கூட, நீட் தேர்வில் நாடகம் நடத்தியதுபோல் இந்தச் சட்ட முன்வடிவிலும் பா.ஜ.க.வும், அதிமுகவும் கூட்டணி அமைத்து இன்றைக்கு வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்