15 மாதங்களில் 5 வது முறையாக கோவைக்கு வந்துள்ளேன்...! என்ன காரணம் தெரியுமா..? முதலமைச்சர் பேச்சு
திமுக ஆட்சி மீது மக்கள் எந்த அளவு மதிப்பும் மரியாதை வைத்துள்ளார்கள் என்பதற்கு இந்த கோவை மாநாடு சாட்சி என கூறினார். எதிர்கால தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை உங்கள் முகங்களில் பார்க்கக்கூடிய மகிழ்ச்சி மூலமாக அறிந்து கொள்ள முடிகிறதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை, திருப்பூர், ஈரோடு அகிய மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நிலையில் கோவை கிணத்துக்கடவு இச்சாணி கல்லூரி வளாகத்தில் அரசு சார்பில் நடைபெறும் விழாவில் புதிய திட்டங்களை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 663 கோடி ரூபாயில் 748 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். 589 கோடியில் ஒரு லட்சத்து 7,410 பயனாளிகளுக்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. 271.25 கோடி மதிப்பு 228 முடிவுற்ற பணிகளையும் முதலமைச்சர் தொடக்கி வைத்தார். இந்த திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், திமுக ஆட்சியமைந்த 15 மாதங்களில் ஐந்து முறை கோவை பகுதிக்கு மட்டுமே வந்துள்ளதாக கூறினார். இந்த மாவட்டத்தின் மீதும் இந்த மாவட்ட மக்கள் மீதும் வைத்துள்ள அன்பின் அடையாளம் இது என கூறினார்.
இந்த விழாவை அரசு விழா என்று செல்வதை விட கோவை மாநாடு என்று சொல்லக்கூடியவகையில், சிறப்பாக நடைபெற்று கொண்டுள்ளதாக தெரிவித்தார். திமுக ஆட்சி மீது மக்கள் எந்த அளவு மதிப்பும் மரியாதை வைத்துள்ளார்கள் என்பதற்கு இந்த கோவை மாநாடு சாட்சி என கூறினார். எதிர்கால தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை உங்கள் முகங்களில் பார்க்கக்கூடிய மகிழ்ச்சி மூலமாக அறிந்து கொள்ள முடிகிறதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு என ஒரு இலக்கை வைத்து வென்று காட்டக் கூடியவராக உள்ளதாக தெரிவித்தவர், செந்தில் பாலாஜியை எவ்வளவு பாராட்டினாலும் போதாது என கூறினார்.
கோவை பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் உடன் இருந்து பணியாற்றக்கூடிய அனைத்து அரசு அதிகாரிகளையும் தமிழக அரசு சார்பாக நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்வதாக கூறினார். கோவை என்றாலே பிரம்மாண்டம் தான், தென்னிந்தியாவின் தொழில் நகரம் இந்த கோவையாகும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏராளமான நிறுவனங்கள் உள்ள இடமும் கோவையாகும், தமிழ்நாட்டிற்கு ஏற்றுமதி, இறக்குமதி குறியீடுகளை வளமாக வழங்கக்கூடிய நகரமாக கோவை உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஆக.30ல் தமிழக அமைச்சரவை கூட்டம்... முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு!!
இதுவரை இல்லாத அளவுக்கு கோவை மாவட்டத்தில் அதிகம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். லட்சக்கணக்கான மக்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளோம் இதுவே திமுக அரசின் சாதனை எனவும் குறிப்பிட்டார். திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு வேகமாக முன்னேறிக் கொண்டு வருகிறது என தெரிவித்தவர், தமிழக அரசின் திட்டங்கள் செயல்பாடுகளை மற்ற மாநில அரசுகள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அந்த மாநிலங்களில் செயல்படுத்து தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்