குறுவை சாகுபடி பாசனத்திற்காக வரும் மே 24 -ஆம்‌ தேதி மேட்டூர்‌ அணையில்‌ இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைக்கிறார்‌. 

சேலத்தில்‌ பல்வேறு நிகழ்ச்சிகளில்‌ கலந்து கொள்வதற்காக வரும்‌ மே 23 ஆம்‌ தேதி மாலை 3 மணிக்கு விமானம்‌ மூலம்‌ சேலம்‌ வருகை தருகிறார்‌ முதல்வர்‌ மு.க. ஸ்டாலின்‌. பின்னர், சேலம் வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தீவட்டிப்பட்டியில்‌ பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதனைஅடுத்து தொப்பூர்‌ வழியாக மேச்சேரி, மேட்டூர்‌ செல்லும்‌ வழிகளில்‌ பிரமாண்ட வரவேற்பும்‌ நடைபெற உள்ளது.

மேலும் படிக்க: Schools Reopen : தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு - எப்போது தெரியுமா..?

தொடர்ந்து இரவு மேட்டுரில்‌ தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும்‌ மே 24 ஆம்‌ தேதி செவ்வாய்கிழமை காலை திருச்சி மற்றும்‌ டெல்டா மாவட்டங்களின்‌ குறுவை சாகுபடிக்காக, மேட்டூர்‌ அணையில்‌ இருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார்‌. பின்னர்‌, மேட்டூர்‌ ஆர்‌.எஸ்‌, குஞ்சாண்டியூர்‌, நங்கவள்ளி, சேலம்‌ உருக்காலை, சேலம்‌ மாநகர்‌ புறவழிச்சாலை வழியாக வாழப்பாடி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஆத்தூர்‌ செல்லியம்பாளையத்தில்‌ நகராட்சி நிர்வாகத்‌ துறை அமைச்சர் கே.என்‌.நேரு தலைமையில்‌ நடைபெறும்‌ ஓயாத உழைப்பின்‌ ஓராண்டு சாதனை விளக்க பொதுக்‌ கூட்டத்தில்‌ பகல்‌ 2 மணிக்கு கலந்து கொண்டு பேசுகிறார்‌. பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு சேலம்‌ வந்து விமானம்‌ மூலம்‌ சென்னை புறப்பட்டு செல்வார்‌ என தகவல்கள்‌ தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க: அலர்ட்.. டிஎன்பிஎஸ்இ குரூப் 2,2ஏ தேர்வு.. 1.83 லட்சம் பேர் எழுதவில்லை. வெளியான அதிர்ச்சி தகவல்..