Asianet News TamilAsianet News Tamil

ரூ14,719 கோடி கூடுதல் செலவை அரசே ஏற்கும் - அரசு ஊழியர்களை குஷிப்படுத்திய எடப்பாடி...! 

Chief Minister Ettappi Palanisamy said that the government will accept an additional cost of Rs 14719 crore due to wage increases of TN Government employees.
Chief Minister Ettappi Palanisamy said that the government will accept an additional cost of Rs 14,719 crore due to wage increases of TN Government employees.
Author
First Published Oct 11, 2017, 6:13 PM IST


தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வால் ஏற்படும் ரூ14,719 கோடி கூடுதல் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வால் 7 லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒரு பகுதியினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வழக்கு தொடருவும் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இதைதொடர்ந்து, 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த அறிக்கையை  நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

இதையடுத்து அரசு ஊழியர்களுக்கு 2.5 மடங்கு ஊதியத்தை உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். 

மேலும், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வால் ஏற்படும் ரூ14,719 கோடி கூடுதல் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வால் 7 லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios