தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மதியம் 2.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இதில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல், ஏப்ரல், மே மாதத்தில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதி முடிவடையவுள்ளது. இதனையடுத்து நேற்று தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவ படையினர் தமிழகம் வந்தனர்.

இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை 4:30 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது, தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிடுகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மதியம் 2.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இதில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.