Asianet News TamilAsianet News Tamil

டெல்லி புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி...!!! ஜனாதிபதி விழாவில் பங்கேற்பு...

Chief Minister Edappadi Palanisamy left for Delhi to attend Ramnath Govinds ceremony to be the countrys 14th president.
Chief Minister Edappadi Palanisamy left for Delhi to attend Ramnath Govind's ceremony to be the country's 14th president.
Author
First Published Jul 24, 2017, 5:14 PM IST


நாட்டின் 14 வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்க உள்ள விழாவில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார்.

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற்று முடிவைடைந்தது.

இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சி வேட்பாளராக மீராக்குமாரும் போட்டியிட்டனர்.

இதில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்று குடியரசு தலைவர் பதவிக்கு தேர்வாகியுள்ளார்.

இதனைதொடர்ந்து, குடியரசு தலைவர் பதவியில் இருந்து இன்றுடன் பிரணாப் முகர்ஜி ஓய்வு பெறுவதையடுத்து அவருக்கு பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சுமித்ரா மகாஜன், ஹமீது அன்சாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், நாளை நாட்டின் 14 வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்க உள்ளார்.

இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios