அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஒபிஎஸ் அணி இன்று தலைமை அலுவலகத்தில் எடப்பாடி அணியுடன் இணைந்துள்ளது. 

இதையடுத்து பேசிய பன்னீர்செல்வம் , உலக அளவில் அதிமுக சரித்திரத்தை உண்டாக்கியுள்ளது எனவும், அதிமுகவின் தொண்டர்களின் எண்ணத்தை நிறைவேற்றியுள்ளதாகவும் பேசினார். 

இதைதொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார். 

இதில், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார். மேலும், இணை ஒருங்கிணைப்பாளராக தானும் , துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மற்றும் துணை அமைப்பாளராக வைத்தியலிங்கம் ஆகியோர் செயல்படுவதாகவும் தெரிவித்தார். 

ஜெயலலிதாவின் ஆத்மா தற்போது சாந்தியடைந்துள்ளதாகவும் இனி எந்த கருத்து வேறுபாடும் இன்றி செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.