- Home
- Politics
- விஜய் தேர்தலில் போட்டியிடவே மாட்டார்..! டிரைவர் அளித்த வாக்குமூலம்.. அதிர வைக்கும் அரசியல் பின்னணி..!
விஜய் தேர்தலில் போட்டியிடவே மாட்டார்..! டிரைவர் அளித்த வாக்குமூலம்.. அதிர வைக்கும் அரசியல் பின்னணி..!
நேரமும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை விஜய்க்கு எதிராகவே முடியும் என டெல்லி வட்டாரத்தினர் கூறுகின்றனர். இதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தவெக ஆலோசனை நடத்தி வருகிறது.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. பொங்கலுக்கு முன்பே அனைத்து கட்சிகளுமே தங்களது கூட்டணி குறித்த இறுதி முடிவுகளை அறிவித்துவிட்டு அடுத்த கட்ட பணிகளுக்குஆயத்தமாகி வருகின்றன. அனைத்து கட்சிகளும் விருப்பமனுக்களை பெற்ற நிலையில அடுத்த கட்டமாக வேட்பாளர்கள் தேர்வும் நடைபெற இருக்கிறது.
அரசியல் கட்சி தலைவர்கள் எந்தத தொகுதியில் போட்டியிடுவார்கள் என ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட இருக்கிறார் என அதிர்ச்சி கிளம்பி இருக்கிறது. அவரது முதுகு பின்னால் மிகப்பெரிய சதி வேலையும் நடைபெறுவதாகவும் சொல்கிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிடாவிட்டால் தமிழக அரசியல் களம் ரணகளமாகும் சூழல் ஏற்படலாம்.
தவெக தொடங்கிய நாட்களில் இருந்து பல போராட்டங்களையும், பிரச்சனைகளையும், எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. மதுரை மாநாட்டில் கொடி கம்பம் சரிந்து விழுந்தது. உச்சகட்டமாக கரூரில் நடைபெற்ற மக்கள் பேரணியில் 41 பேர் பரிதாபமாக மரணமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது சிபிஐ விசாரணையும் நடைபெற்ற வருகிறது. இந்த சம்பவம் நடைபெற காரணம் தவெக திட்டமிட்டு செயல்படாதது தான் என திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதேவேளை திமுக தரப்பு சதி வேலை செய்து இந்த நிகழ்வுகள் நடைபெற்றது என தவெக சார்பில் குற்றம் சாட்ட ப்பட்டது. இந்த விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, விஜய் ஆகியோரை கைது செய்யலாமா என ஆரம்ப காலகட்டத்தில் காவல்துறை ஆலோசனை செய்ததாக கூறப்பட்டது. ஆனால் விஜயை கைது செய்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அதுவே நடிகர் விஜய்க்கு மிகவும் சாதகமாகிவிடும் எனக் கருதியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது சிபிஐ விசாரணை உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உட்பட அனைவரிடமும் சிபிஐ விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இந்த விசாரணையின் போது விஜயின் கார் டிரைவர் அளித்த வாக்குமூலத்தில் சில விஷயங்களை சொல்லி இருப்பது விஜய்க்கு எதிராக ஒரு புதிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அத்தோடு விஜயின் பிரச்சார வேனில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளில் விஜய்க்கு எதிராக பல தகவல்கள் அடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த அடிப்படையில வெகுவிரைவிலேயே விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்ப காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனை தொடர்ந்து விசாரணை நடத்தி முடித்த பிறகு சிபிஐ தனது அறிக்கையை வெளியிட காத்திருக்கிறது. விசாரணை முடிவுகள் விஜய்க்கு எதிராக திரும்புமேயானால் உடனடியாக அறிக்கை சமர்ப்பித்து சம்பந்தப்பட்டவர்களை வேகமாக கைது செய்ய வேண்டும் என முடிவெடுத்டு இருப்பதாகவும் சொல்கின்றார்கள். இது தொடர்பான வழக்கு விசாரணையை உடனடியாக முடித்து விட வேண்டும் என்கின்ற திட்டமும் சிபிஐயிடம் இருப்பதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, விஜய் ஆகிய மூவரும் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவாகலாம் என கூறப்படுகிறது. இந்த சூழல் உருவானால் விஜய் தேர்தல் களத்தில் போட்டியிடுவது கேள்விக்குறியாகும் என்கின்றார்கள்.
சிபிஐ விசாரணை முடிவு வெளியானதும் தமிழக காவல்துறை இது குறித்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையை விஜய் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பது கேள்விக்குறி. சிபிஐ விசாரணையை பொறுத்தவரை தமிழக அரசு மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. சிபிஐ விசாரணையின் போது பரப்புரை கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்தது ஏன்? அவர் தாமதமாக வருவதாக இருந்தால் அதற்கு காரணம் என்ன? தவெக சார்பில் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது? பொதுமக்களுக்கு என்ன வசதிகள் செய்து தரப்பட்டிருந்தது? கூட்ட அனுமதி எப்படி பெறப்பட்டது? அந்த அனுமதியின் படி கூட்டம் நடைபெற்றதா? கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது? போன்ற பல கேள்விகளுக்கு தவெக சார்பில் சரியான பதில்கள் அளிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
எனவே எந்த நேரமும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை விஜய்க்கு எதிராகவே முடியும் என டெல்லி வட்டாரத்தினர் கூறுகின்றனர். இதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தவெக ஆலோசனை நடத்தி வருகிறது. ஒருவேளை தீர்ப்பு எதிராக வருமானால் மேல்முறையீடு செய்யும் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எதுவாக இருப்பினும் சிபிஐ விசாரணை மிக விரைவாக முடிக்கப்பட்டு அதன் அறிக்கை வெளியிடப்படும் என்கிறார்கள்.
