தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரியலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கமல் சினிமாவில் ரிட்டையர்ட் ஆகி இப்போது அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு 70 வயது ஆகிவிட்டது. இந்த வயதில் டி.வி.யில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துகிறார். பிக்பாஸ் நடத்துபவர் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்? இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் குடும்பம் நல்லா இருக்காது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன இருக்கு? 
கமல் நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதாக தெரியவில்லை. நல்லாயிருக்கும் குடும்பத்தை கெடுப்பதே அவர் வேலை. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்தால் குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை கெட்டுப் போவார்கள். நாட்டு மக்களுக்கு பயன்படும்படி எம்.ஜி.ஆர். எவ்வளவு அழகான பாடல்கள் எல்லாம் பாடியிருக்கிறார். அதுபோல பாடலையாவது கமல் பாடியிருக்கிறாரா? அவருடைய படத்தை பார்த்தால் அதோடு அந்தக் குடும்பம் காலியாகிவிடும்.” என்று கமலை கடுமையாக சாடினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.


இந்தநிலையில், முதல்வர் பழனிசாமியின் விமர்சனத்துக்குப் பதில் கமல் சிம்பிளாக ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அந்தப் பதிவில், “முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்று ஒரு ஸ்மைலியையும் இட்டு கமல் பதிவிட்டுள்ளார்.