Asianet News TamilAsianet News Tamil

கோவில்களை இடிக்க தமிழக அரசு உத்தரவு.. போராடத் தயாராகும் பா.ஜ.க !

 

சிதம்பரத்தில் உள்ள இரண்டு கோவில்களை இடிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனை எதிர்த்து பாஜக போராட்டத்தை அறிவித்து இருக்கிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Chidambaram temple demolition by tn govt against bjp party protest
Author
Chidambaram, First Published Nov 16, 2021, 3:59 PM IST

 

 

அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தமிழக அரசால் அகற்றப்பப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த வேலைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. சிதம்பரம் அருகே உள்ள இரண்டு கோவில்களை அகற்ற அரசு நோட்டீஸ் கோவில் நிர்வாகிகளுக்கு அனுப்பி உள்ளது. இதனை கைவிட வேண்டும் என்று இந்து அமைப்புகளும், பாஜகவினரும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருக்கின்றனர்.

Chidambaram temple demolition by tn govt against bjp party protest

கடலூர், சிதம்பரத்தில் உள்ள கீழ வீதியில் வீர ஆஞ்சநேயர் கோவில் மற்றும் தான்தோன்றி விநாயகர் கோவில் அமைந்து இருக்கிறது. இந்த இரண்டு கோவில்களும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன.இதனை அடுத்தே ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டதாக அரசு தரப்பும் தெரிவிக்கப்படுகிறது. அரசின் இச்செயலை எதிர்க்கும் இந்து அமைப்புகளிடையே விசாரித்த போது, அரசு நிலங்களில் வழிபாட்டு தலங்களை அகற்றுவது நல்ல செயல்தான். 

Chidambaram temple demolition by tn govt against bjp party protest

ஆனால் அரசோ இதில் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது. உதாரணமாக சர்ச் ஒன்று அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது. இந்த வழக்கில் நீதி மன்றத்தில் பதில் அளித்த தமிழக அரசு, 100 ஆண்டுகளுக்கும் மேலான சர்ச்சை இடிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியது.இது இந்து கோவில்களுக்கும் பின்பற்றுவதுதான் சரியான நடைமுறையாக இருக்கும்.திமுக அரசின் இந்து விரோத போக்கை கண்டிக்கும் வகையில் நாளை மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது’ என்றனர். 

 

 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios