முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய நூல் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. புத்தக வெளியீட்டுக்குப் பின் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, 2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக அப்போதைய தலைமை மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி, மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டை அறிக்கையாக அளித்தார். வர்த்தகரீதியாக அணுகப்பட வேண்டிய விஷயத்தை சில அரசியல் கட்சிகள் திரித்துக்கூறி அரசியல் ஆதாயம் தேடின. அதற்கான விலையை அரசியல் களத்தில் காங்கிரஸ் கொடுத்துவிட்டது என்றார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சமீபத்தில் ரூ.12,500கோடி மோசடி நடந்துள்ளது. இந்த மோசடி அனைத்தும் ஒரே துறையான நகைகள் தயாரிக்கும்,விற்பனை செய்யும் துறையில் நடந்துள்ளது. இந்த மோசடியின் பிரதான குற்றவாளிகள் அனைவரும் குஜராத் மாநிலத்தை மாநிலத்தை சேர்ந்தவர்கள். 

ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் செய்த குற்றத்திற்கு பல்வேறு தரப்பட்ட அதிகாரிகளும் மக்களும் அவர்களுக்கு உதவி இருக்கலாம். நீரவ் மோடிக்கு குஜராத்தில் இருந்து யார் உதவி இருக்கலாம், எப்படி உதவி இருக்கலாம் என்பன குறித்து எனக்கு தெரியவில்லை என கூறினார்.