Asianet News TamilAsianet News Tamil

சென்னை மாநகர பேக்குவரத்து கழகம் அதிரடி.!! அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பேருந்து..!!

அரசின் பல்வேறு துறைகளில் 50 சதவிகித பணியாளர்களைக் கொண்டு இயங்கிடவும்  உத்தரவிட்டுள்ளார்கள் . அதன் அடிப்படையில் தலைமைச் செயலகத்திற்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 25 பேருந்துகளுடன் கூடுதலாக 25 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன .

Chennai transport commission announce additional buses for government employee
Author
Chennai, First Published May 18, 2020, 11:48 AM IST

நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது இந்நிலையில் அது படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் பேருந்துகளை படிப்படியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது .  இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பணிமனைகளில் பேருந்துகளை இயக்குவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது .  அனுப்பி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் ,  சென்னையில் அத்தியாவசியம் அவசர பணி மற்றும் 50 சதவீத அரசு  ஊழியர்களுக்காக 200 மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .  இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி  குறிப்பின் விவரம் :- தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Chennai transport commission announce additional buses for government employee

மேலும் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்கு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்குமாறு உத்தரவிட்டுள்ளார்கள் இந்நிலையில் அத்தியாவசிய பணிகளான மருத்துவம் பொது சுகாதாரம் குடிநீர் மின்சாரம் பால் மற்றும் தலைமைச் செயலகம் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அரசின் முக்கிய துறைகளைச் சார்ந்தவர்கள் பணிக்கு வருகின்ற வகையில் மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் 175 பேருந்துகள் கடந்த 25-3 -2020 முதல் இயக்கப்பட்டு வருகிறது .  தற்போது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பொது ஊரடங்கை,  மே மாதம் 31 வரை நீட்டித்து உள்ளதோடு தலைமைச் செயலகம் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் 50 சதவிகித பணியாளர்களைக் கொண்டு இயங்கிடவும்  உத்தரவிட்டுள்ளார்கள் .  அதன் அடிப்படையில் தலைமைச் செயலகத்திற்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 25 பேருந்துகளுடன் கூடுதலாக 25 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன .  தலைமைச் செயலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் தங்களது பணிக்கு வந்து செல்ல ஏதுவாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான, Chennai transport commission announce additional buses for government employee

திருவான்மியூர் பேருந்து நிலையம் , கொட்டிவாக்கம் , ஒக்கியம் , கீழ்க்கட்டளை , நங்கநல்லூர் , கேகே நகர் , மறைமலை நகர் , கூடுவாஞ்சேரி , தாம்பரம் , தாம்பரம் கிழக்கு மாதம்பாக்கம் , பூவிருந்தவல்லி , ஐயப்பன்தாங்கல் ,  வடபழனி , அண்ணா நகர் மேற்கு பணிமனை , ஜே ஜே நகர் மேற்கு , திருமங்கலம் , அரசு அலுவலர் குடியிருப்பு , செவ்வாப்பேட்டை . திருநின்றவூர் , ஆவடி , பெரியார் நகர் , பெரம்பூர் பேருந்து நிலையம் , சூரப்பேட்டை , பாடியநல்லூர் , மாதாவரம் , ஆசிஸ் நகர் ,  கவிஞர் கண்ணதாசன் நகர் , மீஞ்சூர் , மாத்தூர் , எம்எம்டிஏ , சிங்கப்பெருமாள் கோயில் , மணலி , எண்ணூர் , நெற்குன்றம் , தேனாம்பேட்டை மற்றும் துரைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் கட்டண அடிப்படையில் இயக்கப்படுகின்றன  .  இனி வரும் நாட்களில் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்கிட ஆவண செய்யுமாறு கோரும் பட்சத்தில் தேவையான பேருந்துகள் இயக்கிட தயார் நிலையில் உள்ளது என மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்  அவர்கள் தெரிவித்துள்ளார். 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios