சென்னை தியாகராயநகர் துணை ஆணையர் அரவிந்தனின் டவுசரை கழட்டாமல் விடமாட்டேன் என்று கருணாஸ் மிரட்டல் விடுத்தார். நடிகர் கருணாஸ் நடத்தி வரும் கட்சியின் நிர்வாகிகள் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தியாகராயநகர் டி.ஜி அரவிந்தன், வடபழனி ஏ.சிக்கு உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பதாக கருணாஸ் கட்சியின் நிர்வாகிகள் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

தங்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் தியாகராயநகர் சரக டி.சி அரவிந்தன் நடந்து கொள்வதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கருணாஸ் கட்சியினர் சென்னையில் கடந்த ஞாயிறன்று ஆர்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் பேசிய கருணாஸ், தனது கட்சி பிரமுகர்களை வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் டி.சி., அரவிந்தன் தொந்தரவு செய்வதாக கூறினார். 

வழக்கறிஞரான தனது கட்சிப் பிரமுகர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், கத்தியை காட்டி மிரட்டி பணம் வசூலிப்பதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கருணாஸ் கூறினார். நான் ஒரு போன் போட்டு பணம் கொடுத்து அனுப்புங்கள் என்றால் பணம் கொடுத்து அனுப்பிவிடுவார்கள் அப்படி இருக்கையில் எனது கட்சிக்காரர் எதற்கு கத்தியை காட்டி பணம் பறிக்க வேண்டும்? மேலம் எனது கட்சிக்காரரின் வீடே 15 கோடி மதிப்புடையது. அவர் மீது பதிவு செய்யப்படும் வழக்கு நியாயமாக இருக்க வேண்டாமா? எனது கட்க்காரன் கை, கால்களை உடைக்குமாறு டிசி அரவிந்தன், ஏ.சிக்கு உத்தரவு போடுகிறார்.

நீ கை கால்களை உடைத்தால் பதிலுக்கு நானும் கை கால்களை உடைப்பேன். ஏற்கனவே அரவிந்தனை வேறு ஊருக்கு மாற்றட்டுமா என்று என்னிடம் கேட்டார்கள். நான் தான் தமிழகத்தை சேர்ந்த அதிகாரியாக உள்ளார், சின்ன பையனாக உள்ளார் அவரை மாற்ற வேண்டாம் என்றேன். இப்போது ஈகோவால் என் கட்சி பிரமுகர்களை அரவிந்தன் தொந்தரவு செய்கிறார். அவர் டவுசரை கழட்டாமல் விடமாட்டேன். இவ்வாறு கருணாஸ் பேசினார்.