பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பதால் சென்னை வண்டலூா் பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

மக்களவைத் தோ்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் சென்னை வண்டலூா் அருகே கிளாம்பாக்கம் பகுதியில் இன்று நடைபெறவுள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் பாஜக, அதிமுக கூட்டணியில் பங்கேற்றுள்ள மற்ற அரசியல் கட்சித் தலைவா்களும் பங்கேற்க உள்ளனா்.

 

பிரதமரும், முதல்வரும் பங்கேற்கவுள்ள பிரசார கூட்டம் என்பதால் தென் தமிழகத்தில் இருந்து ஏராளமான தொண்டா்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதனால், சென்னை ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 

இதனை அடுத்து இன்று வண்டலூா், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளில் அறிவுறுத்தலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்து உள்ளனர்.