சென்னையில் நேற்றிரவு ரோந்து சென்ற போலீஸ் ஒருவரை  கத்தியால் வெட்டிய  ரௌடி ஆனந்தனை சென்னை போலீசார் சற்று முன்பு என்கவுண்டரில சுட்டுக் கொன்றனர்

.சென்னையில் தர்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில்  தகராறு நடப்பதாக  தகவல் கிடைத்ததையடுத்து  ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்த  காவலர்  ராஜவேலு  அப்பகுதிக்கு ரோந்து சென்றார்.

அங்கு 5-க்கும் மேற்பட்ட ரவுடிகள் மது அருந்திக்கொண்டிருந்தனர். இதையடுத்து , அவர்களை ராஜவேலு அங்கிருந்து வெளியேறுமாறு சத்தம் போட்டுள்ளார். அப்போது தனியாக வந்த காவலர் ராஜவேலுவை அந்த ரவுடிகள் துரத்தி துரத்தி சரமாரியாக வெட்டினர்.

அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோதும்  அவரை  விடாமல் கத்தியால் தலை மற்றும் முகத்தில் வெட்டியதாக தெரிகிறது.

இதையடுத்த அந்த ரவுடிகள் ஆட்டோவில் அங்கிருந்து தப்பியோடினர். காவலர் ராஜவேலுக்கு அதிக ரத்தம் வெளியேறியதால் மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதல் நடத்தியது ரவுடி ஆனந்தன் உள்பட 5 பேர் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து  சற்று நேரத்தில் ஆனந்தன்  மற்றும் அவரது கூட்டாளிக்ள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவனிடம் போலீசார் விசாணை நடத்தினர். இதையடுத்து விசாரணைக்காக ஆனந்தனை  போலீசார் அழைத்துச் சென்றபோது போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். இதனால் போலீசார் அவரை சுட்டுக் கொன்றனர்.