மழை பெய்தாலே கரெண்ட் கட் பண்ணிடுவாங்க என்று மக்கள் நினைக்கும் சூழல் இப்போது இல்லை.. அமைச்சர் செந்தில் பாலாஜி.!

கடந்த ஆண்டுகளில் சிறிய மழைக்கே மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால், தற்போது அதுபோன்ற சூழல் இல்லை. இதற்கு முதல்வர் எடுத்த நடவடிக்கையே காரணம். எவ்வளவு மழை பெய்தாலும் மின்விநியோகம் நிறுத்தக்கூடாது. 

Chennai power supply has not been affected.. Minister senthil balaji

தமிழ்நாட்டில் தொடர் மழையிலும் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி  செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழ்நாட்டில் தொடர் மழையிலும் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. சென்னையிலும் மழையால் மின்தடை பாதிப்பு இல்லை. கடந்த ஆண்டுகளில் சிறிய மழைக்கே மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. தடையின்றி மின் விநியோகம் செய்ய பணியாளர்கள் 24 மணிநேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க;- சமூகநீதிக்கு மிகப் பெரிய ஆபத்து.. மாத வருமானம் ரூ.66,000 பெறுவோர் ஏழைகளா? முதல்வர் ஸ்டாலின்..!

Chennai power supply has not been affected.. Minister senthil balaji

நாகப்பட்டின மாவட்டம் திருவலங்காடு பகுதியில் மட்டும் 2 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. பின்னர், இரவோடு இரவாக சரிசெய்யப்பட்டது. மழைக்காலங்களில் பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தினார். கடந்த ஆண்டுகளில் சிறிய மழைக்கே மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால், தற்போது அதுபோன்ற சூழல் இல்லை. இதற்கு முதல்வர் எடுத்த நடவடிக்கையே காரணம். எவ்வளவு மழை பெய்தாலும் மின்விநியோகம் நிறுத்தக்கூடாது. 

Chennai power supply has not been affected.. Minister senthil balaji

பாதிப்பு ஏற்பட்டால் மட்டும் நிறுத்த வேண்டும். அதுவும் உடனடியான மின்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தாலும் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என  அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- அரசியல் கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்ல கூடாது.. தமிழ் மகன் உசேனுக்கு அமைச்சர் பதில்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios