சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ,   கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுவந்த காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனையடுத்து அவர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்  அண்ணா நகர்  காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கும்  கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சோதனை செய்யப்பட்டு வருகிறது , கொரோனா வைரஸ் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது ,  இதுவரையில் தமிழகத்தில் சும்மா 2757 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .  இதுவரை  29 பேர் கொரோனாவால்  உயிரிழந்துள்ளனர் .  இந்நிலையில் மாநிலத்திலேயே கொரோனாவுக்கு  அதிக பாதிக்கப்பட்ட பகுதியாக சென்னை இருந்து வருகிறது . 

இந்நிலையில்  கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சென்னையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன ,  காவல்துறை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ,  சுகாதாரத்துறை ஊழியர்கள் ,  என மொத்த அரசு இயந்திரமும் கொரோனா பணியில் முடுக்கிவிடப்பட்டுள்ளது ,  இந்நிலையில் இரவு பகல் பாராமல் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,சென்னையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,  அதாவது அண்ணாநகர்  காவல் மாவட்டத்திற்குட்பட்ட  கோயம்பேடு மார்க்கெட்டில் அவர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வைரஸ் பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது . 

இதனையடுத்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் கொரொனா பரிசோதனை செய்யப்படுகிறது , அதுமட்டுமின்றி காவல்துறை அதிகாரியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது ,  ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக இருந்து வந்த நிலையில்  அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிக்கும் நோய்த்தொற்று பரவியிருப்பது சக காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்நிலையில்  காவல்துறையில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என பொதுவான கோரிக்கை எழுந்துள்ளது.  முன்னதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் 28  வயதான அந்தப் பெண் தற்போது சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .  உடன் பணியாற்றும் சக ஊழியர்களுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் கூட பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது ,  தற்போது காவல்துறை அதிகாரிக்கு  வைரஸ் தொற்று  ஏற்பட்டிருப்பது காவல்துறையினர் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.