Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் ஜூலை 6ம் முதல் புதிய கட்டுப்பாடுகள்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

சென்னைக்கு ஜூலை 6ம் தேதி முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். 

Chennai new restriction... edappadi palanisamy announced
Author
Tamil Nadu, First Published Jul 4, 2020, 5:53 PM IST

சென்னைக்கு ஜூலை 6ம் தேதி முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் சென்னைக்கு ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Chennai new restriction... edappadi palanisamy announced

* சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்

* டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும்

* உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி

* தொலைபேசியில் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு இரவு 9 மணி வரை அனுமதி

* வணிக வளாகங்கள் தவிர அனைத்து ஷோரூம்கள், ஜவுளி, நகைக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை செயல்படலாம். மறு உத்தரவு வரும்வரை கட்டுப்பாடுகள் நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios