Asianet News TamilAsianet News Tamil

தொலைபேசியில் அழைத்தால் பேருந்து சேவை..!! சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அதிரடி அறிவிப்பு..!!

புறநகர் பகுதிகளில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைகளில் பணியாளர்களுக்கு பேருந்து வசதி தேவைப்படும் பட்சத்தில் அவர்களும் மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் 

Chennai metro transport corporation announce bus service over phone
Author
Chennai, First Published May 21, 2020, 2:17 PM IST

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சென்னையில் பல்வேறு நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வரும் நிலையில் அரசு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கூடுதலாக 30 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது , அதே நேரத்தில் தனியார் தொழிற்சாலைகளின் தேவைக்கு பேருந்துகள் தேவை என்றாலும் மாநகர போக்குவரத்து கழகத்தை அனுகலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது .  மேலும் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகப்  பேருந்துகளை  இயக்கிடமாறும் உத்தரவிட்டுள்ளார் .  ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு மே-31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 33 சதவிகித அளவில் பணியாற்றி வந்த நிலையில் ,  18-5-2020 முதல் 50 சதவிகித  பணியாளர்கள் பணிக்கு வருமாரு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் . 

Chennai metro transport corporation announce bus service over phone

அதன் அடிப்படையில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் தலைமைச் செயலகம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அலுவலகங்களில் உள்ளவர்கள் பணிக்கு வர ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 200 பேருந்துகள் கட்டண அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது ,  இந்நிலையில் தலைமைச் செயலகத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கிடுமாறு கூறியதன் அடிப்படையில் பணியாளர்கள் அலுவலகம் வந்து செல்ல ஏதுவாக 25 பேருந்துகளும் ,  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,  பள்ளி கல்வி இயக்குனரகம்  உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளுக்கு 5 பேருந்துகள் என ஆக மொத்தம் 230 பேருந்துகள் கட்டண அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது .  மேலும் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் செங்கல்பட்டு ,  காஞ்சிபுரம் ,  திருத்தணி ,  திருவள்ளூர் ,  வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து தலைமைச் செயலகம் எழிலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலக ஊழியர்கள் பணிக்கு வர ஏதுவாக 49பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

Chennai metro transport corporation announce bus service over phone

சென்னையில் உள்ள மாநில மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பேருந்து வசதி தேவைப்படும் பட்சத்தில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் தலைமை இயக்க பொதுமேலாளர் (இயக்கம்) (9455030504 )துணை மேலாளர்(வணிகம்) (94450 30 523) ஆகியோர்களை கைபேசி என்னிலும் edp.mtc@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் பதிவிடுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .  மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைகளில் பணியாளர்களுக்கு பேருந்து வசதி தேவைப்படும் பட்சத்தில் அவர்களும் மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது . 
 

Follow Us:
Download App:
  • android
  • ios