கேரளாவைச் சேர்ந்த டீடீஐ மாணவி ஃபாத்திமா  கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்தது கொண்டார். அவரது செல்போனில் தனது தற்கொலைக்கு ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மனாபன் மற்றும் இருவர் காரணம் என பதிவு செய்து வைத்திருந்தார்.

இந்நிலையில் பாத்திமாவின் தந்தை தமது மகள் மரணம் குறித்து நடவடிக்கை எடுக்க  டி.ஜி.பி. திரிபாதியை நேரில் சந்தித்து மனு அளித்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாத்திமாவின் தந்தை சந்தித்தார். 

அப்போது உடன் இருந்த எம்.எல்.ஏ. அபு பக்கர், இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்திருப்பதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்தார்.

இந்தநிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல, அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது. அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும் ன குறிப்பிட்டுள்ளார்..

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதன் மூலமாக நியாயத்தின் பக்கம் நிற்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஆதிக்க சக்திகளின் கொடும்பற்கள் தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை என்பதையே பாத்திமாவின் மரணம் காட்டுகிறது.

இதுபோன்ற நிகழ்வுகள் திராவிட இயக்கம் எப்போதும் தேவை என்பதை தொடர்ந்து உணர்த்துகின்றன என அந்த டுவிட்டர் பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்..