Asianet News TamilAsianet News Tamil

எசக்கு பிசக்காக மாட்டிக்கொண்ட எஸ்.வி.சேகர்.. அலறியடுத்து கொண்டு நீதிமன்றத்தின் கதவை தட்டி தப்பித்தார்.!

சர்ச்சைகளுக்கு பெயர் போன காமெடி நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சந்திரசேகர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். காவியை கலங்கம் என்று குறிப்பிடும் தமிழக முதல்வர் கலங்கமான தேசியக் கொடியைதான் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏற்ற போகிறாரா அல்லது காவியை மட்டும் கட் செய்துவிட்டு வெள்ளையும் பச்சையும், அதாவது கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு மட்டும் இருந்தால் போதும் இந்துக்கள் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா? என்ன அந்த வீடியோவை கேள்வி எழுப்பினார்.

Chennai High Court stays hearing of case against SV Sekar
Author
Chennai, First Published Oct 10, 2021, 12:19 PM IST

தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதாக நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக, சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சர்ச்சைகளுக்கு பெயர் போன காமெடி நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சந்திரசேகர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். காவியை கலங்கம் என்று குறிப்பிடும் தமிழக முதல்வர் கலங்கமான தேசியக் கொடியைதான் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏற்ற போகிறாரா அல்லது காவியை மட்டும் கட் செய்துவிட்டு வெள்ளையும் பச்சையும், அதாவது கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு மட்டும் இருந்தால் போதும் இந்துக்கள் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா? என்ன அந்த வீடியோவை கேள்வி எழுப்பினார்.

Chennai High Court stays hearing of case against SV Sekar

அதே நேரத்தில் அதிமுக உருப்பட வேண்டுமென்றால் அதிமுக கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வர் குறித்து தவறான தகவலை தெரிவித்தும், தேசிய கொடியை அவமதிக்கும் வகையிலும் யூடியூபில் வீடியோ வெளியிட்ட எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சைபர் கிரைப் போலீசில் புகார் கொடுத்தார். 

இதையும் படிங்க;- வீட்டில் அடிக்கடி உல்லாசம்.. தாயின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட சிறுவன் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க கொலை.!

இதனையடுத்து, எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்றும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் எஸ்.வி.சேகர் கோரிக்கை விடுத்திருந்தார். 

Chennai High Court stays hearing of case against SV Sekar

களங்கமான தேசிய கொடியைதான் முதல்வர் ஏற்றப் போகிறாரா என்றுமட்டுமே தான் கேள்வி எழுப்பினேன். தேசிய கொடிக்கு எப்போதும் மரியாதை செலுத்துபவன். அரசியல் உள்நோக்கத்துடன் இந்த புகார் அளிக்கப்பட்டது என்று விளக்கம் அளித்திருந்தார். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கு தடை விதித்தும், நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios