Asianet News TamilAsianet News Tamil

நெருங்கும் தீர்ப்பால் அலறும் எஸ்.பி.வேலுமணி.. கோர்ட்டில் நடந்த காரசார வாதம்..!

சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் 500 கோடி ரூபாய் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டு எழுந்தது. 

Chennai High Court adjourned judgment in SP Velumani case
Author
First Published Nov 9, 2022, 8:45 AM IST


தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் 500 கோடி ரூபாய் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டு எழுந்தது. அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.வேலுமணி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். 

இதையும் படிங்க;- எடப்பாடியார் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும்… எஸ்.பி.வேலுமணி தகவல்!!

Chennai High Court adjourned judgment in SP Velumani case

இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது. எஸ்.பி.வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எஸ்.வி.ராஜு, சித்தார்த் தவே ஆகியோர் வேலுமணிக்கு எதிரான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று வாதிடப்பட்டது.  ஒளிவுமறைவற்ற முறையில் டெண்டர் கோரப்பட்டதாகவும், அதில் தனக்கு எந்த பங்கும் இல்லை, அந்த குழுவிலும் இடம்பெறவில்லை எனவும் வாதிடப்பட்டது. வாதிடப்பட்டது.

 அப்போது புகார்தாரரான அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.சுரேஷ், பொத்தாம் பொதுவாக அல்லாமல், குறிப்பிட்டு குற்றச்சாட்டுக்கள் கூறி அளிக்கப்பட்ட புகாருக்கு ஆதாரமாக ஏராளமான ஆவணங்கள் தங்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார். தற்போதைய அரசு உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ளதாக வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு. முந்தைய அரசும், லஞ்ச ஒழிப்புத் துறையும் தான் உள்நோக்கத்துடன் செயல்பட்டது. கோவையில் 47 டெண்டர்கள் அமைச்சரின் உறவினர்களுக்கு சொந்தமான இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து இந்த டெண்டர்கள் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சருக்கு வேண்டியவர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் குறிப்பிட்ட நேரத்தில் விண்ணப்பிக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டு, டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;-  குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவித்துவிட முடியாது.. நீதிபதிகள் கூறிய கருத்தால் வெல வெலத்து வேலுமணி..!

Chennai High Court adjourned judgment in SP Velumani case

அரசு அதிகாரிகளுக்கு வேலுமணியின் நண்பர் கே.சந்திரசேகர் உத்தரவுகளை பிறப்பித்தார். அதனடிப்படையில், சிறு ஒப்பந்ததாரர்களின் டெண்டர்கள் எவ்வித காரணமும் கூறாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. முறைகேடாக டெண்டர் ஒதுக்க துணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு பிறப்பிக்கப்படும் உத்தரவு கடந்த ஆட்சி காலத்தில் இருந்த அதிகாரிகள் மட்டுமல்லாமல், தற்போதைய மற்றும் எதிர்கால அரசுகளின் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.

ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் அடிப்படையில் மட்டுமே, உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்படுவதாக குறிப்பிட்டார். புலன் விசாரணை அதிகாரியின், விசாரணை முடிவை அடிப்படையாகக் கொண்டுதான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார்.

Chennai High Court adjourned judgment in SP Velumani case

மேலும், லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா , "சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதை தடுக்கும் வகையில், நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய் என்பதை 20 கோடியாக மாற்றி அமைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், வேலுமணி தாக்கல் செய்திருந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க;-   லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு தடை இல்லை.. எஸ்.பி.வேலுமணிக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்..!

Follow Us:
Download App:
  • android
  • ios