Asianet News TamilAsianet News Tamil

சோறு வேணாம்... தீர்வு வேணுமுங்க அய்யா... ட்விட்டரில் ட்ரெண்டாகும் #திமுக_நாடகக்கம்பெனி

இந்த 50 ஆண்டுகளில் ஆட்சிகள், கட்சிகள் மாறினாலும், மழை நேரக் காட்சிகள் மட்டும் மாறவே இல்லை. 

chennai flood The trend on Twitter is #DMK_Drama Company
Author
Tamil Nadu, First Published Nov 11, 2021, 10:57 AM IST

50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்து கொண்டிருக்கும் திராவிட கட்சிகள் ஆண்டுக்காண்டு மழைநீர் வடிகால் என மகத்தான திட்டங்களை வரிப்பணத்தில் பெருஞ்செலவில் செய்து என்ன பயன்? உண்மையிலேயே மாநகராட்சியில் மழைநீர் வடிகால் திட்டங்கள் பெருஞ்செலவில் செய்யப்பட்டதா? அல்லது வெறும் கணக்கிற்கு கட்டப்பட்டதா? என்ற ஐயம் பலருக்கு எழுகிறது.

 

எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என பலரும் முதலமைச்சராக பதவியேற்றபோதும் இந்த 50 ஆண்டுகளில் ஆட்சிகள், கட்சிகள் மாறினாலும், மழை நேரக் காட்சிகள் மட்டும் மாறவே இல்லை. 

 

பெருமழை பெய்யும்போதெல்லாம் இவர்கள் மக்களை சந்தித்து புகைப்படம் எடுத்து போட்டுக் கொள்கிறார்களே தவிர, எதிர்கட்சியாக இருக்கும்போது புகார் சொல்கிறார்களே தவிர, நிரந்தர தீர்வுக்கு வழிகாட்டுவதாக தெரியவில்லை. புகைப்படங்களை எடுத்து பப்ளிசிட்டி தேடிக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தை தீர்வு காண்பதில் கவனம் செலுத்துவதில்லை. 

 

இந்த மழைக்கு ஆளும்கட்சி, எதிர்கட்சி, பாஜக உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மழை வெள்ளத்தை பார்வையிட்டு தங்களை ஃபோகஸ் செய்ய பெரும் அக்கறை காட்டினர். இதில் சில புகைப்படங்களும், வீடியோ பதிவுகளும்  வெளியாகி அவர்களின்  மற்றொரு பக்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறன. அந்த புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பி இருக்கிறன.

 

இந்நிலையில், மு.க.ஸ்டாலின், மக்களை சென்று சந்தித்தபோது வீடுகளில் கயிறு கட்டிய புகைப்படமும், உபயோகப்படாத பம்ப் செட் புகைப்படம், சாமியானா பந்தல் போட்டு பார்வையிட்ட புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், இதனை பாஜக தகவல் தொழில்நுட்ப அணியினர் #திமுக_நாடகக்கம்பெனி என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றன.  

 

Follow Us:
Download App:
  • android
  • ios