Asianet News TamilAsianet News Tamil

இப்படி பண்ணீங்க சென்னை இன்னொரு நியூயார்க்காக மாறிவிடும்... அலறி அடித்துக்கொண்டு எச்சரிக்கும் ராமதாஸ்..!

சென்னையில் ஊரடங்கை மீறிய போக்குவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை தவறியது கண்டிக்கத்தக்கது. ஊரடங்கை செயல்படுத்தியதில் சபாஷ் வாங்கிய சென்னை காவல்துறைக்கு திடீர் சோர்வு, சுணக்கம் ஏன்? ஒருவேளை ஊரடங்கை தளர்த்த காவல்துறைக்கு ரகசிய ஆணை வந்திருக்கிறதா?" என காட்டமாக அவர் பதிவிட்டுள்ளார்.

Chennai could become another New York...Warning Ramadoss
Author
Tamil Nadu, First Published Apr 21, 2020, 4:36 PM IST

ஊரடங்கை செயல்படுத்தியதில் சபாஷ் வாங்கிய சென்னை காவல்துறைக்கு திடீர் சோர்வு, சுணக்கம் ஏன்? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்  "சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு இரு சக்கர வாகனங்களும், கார்களும் விரைகின்றன. சென்னை என்ன கொரோனா காலத்து சுற்றுலாத்தலமா? ஊரடங்கை மதிக்காவிட்டால் சென்னை இன்னொரு நியூயார்க்காக மாறிவிடும்... எச்சரிக்கை!

Chennai could become another New York...Warning Ramadoss

தமிழகத்தின் 23 ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் சென்னை தான் முதலிடம். 10 மாவட்டங்களின் மொத்த பாதிப்பை விட அதிகமாக சென்னையில் 303 பேர் பாதிப்பு. அதன்பிறகும் பொறுப்பின்றி மக்கள் ஊர் சுற்றினால், அதை காவல்துறை அனுமதித்தால் கொரோனாவிடமிருந்து சென்னையை யாராலும் காப்பாற்ற முடியாது!

Chennai could become another New York...Warning Ramadoss

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் போல வாகனங்கள் அணிவகுப்பதை காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாதா? அதிக கட்டமைப்பு கொண்ட போக்குவரத்து காவல்துறையால் அனைத்து சாலைகளிலும் சோதனைச்சாவடிகளை அமைக்க முடியாதா? அதையும் மீறும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய முடியாதா?

சென்னையில் ஊரடங்கை மீறிய போக்குவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை தவறியது கண்டிக்கத்தக்கது. ஊரடங்கை செயல்படுத்தியதில் சபாஷ் வாங்கிய சென்னை காவல்துறைக்கு திடீர் சோர்வு, சுணக்கம் ஏன்? ஒருவேளை ஊரடங்கை தளர்த்த காவல்துறைக்கு ரகசிய ஆணை வந்திருக்கிறதா?" என காட்டமாக அவர் பதிவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து அறிவித்த சில ஊரடங்கு தளர்வுகளை, மத்திய அரசின் அறிவுறுத்தலுக்குப் பிறகு திரும்பப் பெற்றது கேரள அரசு. கொரோனா பரவல் கணிக்க முடியாத அளவுக்கு இருப்பதால் ஊரடங்கை தளர்த்துவது மிகுந்த கவனம் தேவை! என  அவர் பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios