சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வீட்டில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தொற்று தடுப்பு மேலாண்மை அமைப்பு குறித்த கைப்பேசி செயலியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று துவக்கி வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வீட்டில் தனிமைப்படுத்துதல் மற்றும் நோய்த்தொற்று தடுப்பு மேலாண்மை அமைப்பு குறித்த கைபேசி செயலியை ஆணையர் பிரகாஷ் அவர்கள் இன்று ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.  பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வார்டிலும் பல்வேறு வகையில் மக்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். 

இதனைக் கண்காணிக்க வீட்டில் தனிமைப்படுத்துதல் மற்றும் நோய்த்தொற்று தடுப்பு மேலாண்மை அமைப்பு (HQIMS APP)என்கின்ற அமைப்பு உருவாக்கப்பட்டது, இவ்வமைப்பு சீரிய முறையில் பணியை மேற்கொள்ள ஒவ்வொரு வார்டிலும் உள்ள அனைத்து தெருக்களுக்கும் கவனத் தன்னார்வலர்கள் (Friend of COVID Citizen under Surveillance(FOCUS) Volunteers)பணியமர்த்தப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தெருக்களில் பல்வேறு வகையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை வீட்டிலிருந்து வெளியே வராமல் இருப்பதை கண்காணிக்கவும், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக பெருநகர சென்னை மாநகராட்சி 200 வார்டுகளுக்காக 3302 கவன தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட கவன தன்னார்வலர்கள் பணியானது பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் துறையின் வரி வசூலிப்பவர்கள், உரிமம் ஆய்வாளர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் துறை காவலர்கள் கொண்ட குழுவால் மேற்பார்வை செய்யப்பட்டு, அந்தந்த பகுதியை சார்ந்த வரி மதிப்பீட்டாளர்கள் மற்றும் மண்டல உதவி வருவாய் அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

கவனத் தன்னார்வலர்களது இந்த பணியினை மேலும் சிறப்பான வகையில் மேம்படுத்துவதற்காக, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்த Mr. Cooper IncCompany ஆனது வீட்டில் தயார் படுத்துதல் மற்றும் நோய்த்தொற்று தடுப்பு மேலாண்மை அமைப்புக்கான (HQIMS APP) புதிய செயலியை உருவாக்கி உள்ளது. இந்த நிறுவனம் இந்த செயலியை பெருநகர சென்னை மாநகராட்சி இலவசமாக வழங்கி அதனை பராமரிக்கவும் செய்கிறது, வீட்டில் தனிமைப்படுத்துதல் மற்றும் நோய்த் தொற்று தடுப்பு மேலாண்மை அமைப்புக்கான (HQIMS APP) புதிய செயலியினை ஆணையாளர் அவர்கள் இன்று அறிமுகம் செய்து வைத்தார். இந்த செயலியை உருவாக்கி வழங்கிய நிறுவனத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார், தொடர்ந்து இந்த செயலியை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது. இச்செயலின் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்கள் அடிப்படை விவரங்கள், தனிமைப்படுத்தப்பட்ட காலம், அவர்களுக்கு தேவையான வாழ்வாதார தேவைகள் ஆகியவற்றை தன்னார்வலர்களின் துணையோடு தினந்தோறும் பெற இயலும், இச்செயலியில் இருந்து வரப்படும் தகவல்கள் வருவாய்த்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் துறையின் மூலம் பெறப்பட்டு இத்திட்டமானது திறம்பட நிர்வகிக்கப்படும்  என சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.