செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,272ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதுவரை தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,06,737ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,51,055 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,409-ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பு உயர்ந்து கொண்டு வரும் அதே வேளையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்துகிறது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 93,357ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டம் இருந்து வருகிறது. இன்று மேலும் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,272ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 8,787 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெறுவோர் 2,755ஆக உள்ளது. இதுவரை 222 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் இன்று செங்கல்பட்டில் கொரோனா புதிய உச்சம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.