மேயர்,துணை மேயர் தேர்தலில் வேட்பாளர்கள் கட்சி மாறி வாக்களிப்பதை தடை செய்ய வேண்டும் என பாஜக கோரி்க்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர்கள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறும் பட்சத்தில் அந்த எம்எல்ஏ பதவியானது பறிக்கப்படும். இதே போலத்தான் நாடளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்படும். எனவே சட்ட மன்ற உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ தங்கள் கட்சி மீது உள்ள அதிருப்தி காரணமாக உடனடியாக கட்சி மாற முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்..இதனால் கட்சி தலைமையும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சிப் பதவிகளை மட்டும் பறித்து விட்டு அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து முழுமையாக நீக்காமல் விட்டு விடுகிறது. இதனால் எம்எல்ஏ மற்றும் எம்.பிக்கள் தங்கள் பதவி பறிக்குப்படும் என்ற அச்சத்தின் காரணமாக மாற்று கட்சிக்கு நேரடியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதற்காகத்தான் கட்சித்தாவல் தடை சட்டமானது மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்காரணமாக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்ற கட்சிக்கு மாறுவதும் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஒரு கட்சியில் இருந்து மாற்று கட்சிக்கு எளிதாக செல்லும் நிலையானது தற்போது உள்ளது.
குறிப்பாக மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு மறைமுக தேர்தலானது நடைபெறுகிறது. அப்பொழுது ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு எளிதாக மாறி சென்று வாக்களிக்கும் நிலையானது தற்போது உள்ளது. இதன் மூலம் குதிரை பேரம் அதிகமாக நடைபெறுவதாக அரசியல் கட்சிகள் சார்பாக குற்றம்சாட்டப்பட்டு வருகின்றனது.

இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுக தேர்தலின் போது நடைபெறும் குதிரை பேரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக கணிசமான இடங்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அதை நேரத்தில் திமுக எப்படி தேர்தலில் வெற்றி பெற்றது என்ற ரகசியம் அனைவருக்கும் தெரியும் என்றும் கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர், எதிர் கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்தார். ஒரு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் திமுகவிற்கு செல்லும் வேட்பாளர்களின் செயல் மன்னிக்க முடியாது என்று தெரிவித்தார். எனவே சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் வேறு கட்சிக்கு ஆதரவு கொடுக்க முடியாது என தெரிவித்தவர், அதே போல உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற்ற கட்சி வேட்பாளர்கள் வேறு கட்சிக்கு ஆதரவளிப்பது தடுக்க கட்சி தாவல் தடை சட்டம் உடனடியாக கொண்டுவர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் போது கண்டிப்பாக கட்சி தாவல் தடை சட்டம் கொண்டு வரப்படும் என உறுதியளித்தார்.
